பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 உலகிலேயே மக்கள் தொகையின் அடர்த்தி அதிக மாக உள்ள இடம் எது என்ற கேள்விக்கு எந்த நகரத்தின் பெயரையாவது விடையாகச் சொல்பவர்களை இந்த கிட்டாம்பட்டியில் உள்ள இந்து உயர்தர ஆரம்பப் பாடசாலைக்குக் கூட்டிவர வேண்டும். மண்ணடர்த்தி இல்லாத மண் சுவர்களுக்கு மத்தியில் இருக்கும் வகுப் புக்களை வந்து அவர்கள் பார்க்கட்டும். யார் யார் எங் கெங்கே இருக்கிறார்கள் கான்பதை வகுத்துப் பார்க்க முடியாத அளவிற்கும் ஒவ்வொரு வகுப்பிலும் மாணவ மாணவியர் முண்டியடித்து உட்கார்த்திருந்தார்கள். சிறு வயதிலேயே பிள்ளைகள் ஒருவரோடொருவர் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற லட்சியத்தில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டிருக்கலாம். இரண்டு கிழட்டு மாடுகள் சேர்ந்தாற்போல் படுத்தி ருப்பது மாதிரி தோன்றும் அந்தக் கட்டிடம் இரண்டு பிரிவுகளாக, தனித்தனி கட்டிடங்களாக உள்ளன. அந்த இரண்டுக்கும் நடுவில் உள்ள இடுக்கில் பழைய பாத்திரங் களும், கிழிசல் குவியல்களும் போடப்பட்டிருந்தன .ந்த இடுக்கிற்கு, சொல்லக்கூடாத, ஒரு சரித்திரமும் உண்டு. ஒரு கட்டிடம் யானைமார்க்' ஒடு போட்டது. இன் னொன்றின் மேல் ஒலைப் பாய்தார் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. அப்பப்போ சில செங்கற்கள் விழுந் தாலும், இதுவரை யிருக்கு ஆபத்து ஏற்பட்டதில்லை.