பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. சு. சமுத்திரம் உபதேசம் செய்தான். மாரியம்மாள் தன் பருத்தி ஆடை முந்தானையைச் சரிப்படுத்திக் கொண்டு, பிள்ளைகளை எட்படி எப்படி இடம் மாற்றி உட்கார வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள். 'ஐந்தாறு வகுப்புகளைத் தாண்டி, ஏழாவது வகுப்பு. ஐந்தாவது வகுப்பு ஆசிரியரான ஐம்பத்தைந்து வயது சீனிவாசன் க ங் ச எழுத்துக்களை பதினெட்டு தடவ எழுதுங்கடா என்று உத்தரவிட்டார். பிள்ளைகள் 'சிலேட்டில் எழுதிக்கொண்டிருந்தார்கள். ஓரிருவர் எழுதி முடித்துவிட்டு, எழுதியதை அவரிடம் காட்டிய போது, அவர் அந்த எழுத்துக்களை அழித்துவிட்டு, 'இன்னொரு தடவ எழுதுங்கடா என்றார். இதனால் வேகமாக எழுதிக் கொண்டிருந்த சில பயல்கள், மெதுவாக எழுதினார்கள். இன்னும் எழுதாமலேயே இருந்தவர்கள், அப்படியே இருந்தார்கள். கேட்டால் 'இப்பத்தான் அழிச்சேன்' என்று சொல்லலாம். பாவம், சீனிவாசன் கவலை சீனிவாசனுக்கு. தங்கப்பாண்டி இன்னைக்கு சம்பளத்துல எவ்வளவு பிடிக்கப் போறானோ? வாயும் வயிறுமாக வந்து, இப்போது பிள்ளையும் கையுமாக உள்ள மகளை நாளைக்கு புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைக்கணும். அவனுக்கு சென்னையில் வேலை. காரைக் கட்டிடத்தில் எட்டாவது வகுப்பும், அதன் செக்ஷன்களும், இன்னும் சில வகுப்புகளும் இருந்தன. "ஏ" செக்ஷன் ஆசிரியை இந்திரா, மானேஜர் அறையில் தான் இருப்பாள். தலைமை ஆசிரியர் தங்கச்சாமி தான் அவளுக்கும் சேர்த்து 'அழ’ வேண்டும். வெளியூர்க் காரரான இந்த ஐம்பது வயது ஆசாமியால் இ.க்கு மடக்கு செய்ய முடியாது என்று தான், தங்கப்பாண்டி இவர் தலையில் ஆசிரியர்களை வைத்திருக்கிறார். வாயில்லா pவன்.