பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. சு. சமுத்திர்ம் "மானேஜர்கிட்ட கேட்டுப் பாத்தியா?” நான் கேட்டா அவரு இன்னொன்ன கேப்பாரு போலுக்கு...' மாரியம்மாள், கண் கலங்க தலை கவிழ்ந் தாள். இருபது வயதிருக்கும். கறுப்புக்கு அழகுண்டு என்பதைக் காட்டுவதற்காகப் பிறந்தவள் போல் தோன்றி னாள். கையில், கண்ணாடி வளையல்கள். காதுகளில் 'எட்டனா கம்மல்கள். மைதானத்தில் தனியாக நின்ற ஆசிரியை இந்திரா போய்விட்டாள். முப்பது வயதுக்காரி. அவள், காது கேட்க முடியாத துரத்திற்குப் போய்விட்டாள் என்பதை குதிகாலை நிமிர்த்தி எட்டிப் பார்த்து அனுமானித்துக் கொண்டே நான்காவது வகுப்பு ஆசிரியை கனகம் கிசுகிசுத்தாள். 'ஒனக்கு கொஞ்சங்கூட மூளையில்ல மாரி, இதே பே.:றாளே...இவள் சரியான கள்ளி...மேனேஜர் கிட்ட நீ சொன்னதைச் சொல்லப் போறாள் பாரு. ’’ 'சொன்னால் சொல்லட்டும்!' 'நீ என்ன செய்யப் போற?' 'அதுதான் எனக்கும் தெரியலே. தம்பி தறுதலையா சுத்துறான் அப்பாவுக்கு உடம்பு முடியல. அம்மாவால வயல் வேலைக்குப் போக முடியல இந்த ரெண்டு மாசமா நான் அனுப்புன பணத்துல ஏதோ பட்டினி கிடக்காம யாவது இருக்காங்க... என்ன பண்ணுறதுன்னு புரியல...' "மானேஜர் கிட்ட பக்குவமா கேட்டுப் பாரேன்.' 'பக்குவமான்னா என்ன அர்த்தம்?' ' இதற்குள் ‘க ங் ச' எழுதச் சொன்ன முதிய ஆசிரியர் சீனிவாசனும் சத்தம் போட்டு பாடம் நடததும் வேலா யுதமும் அங்கே வந்ததால், ஆசிரியைகள் பேச்சை முடிக்க முடியாமலும், தொடர முடியாமலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். சீனிவாசன், தன்முகத்தைத் தானே பார்ப்பவர்போல் அண்ணாந்து பார்த்துக்கொண்டே