பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. சு. சமுத்திரம் வேலாயுதம், பாடம் நடத்துவதுபோல் சத்தம் போட்டான். 'இன்னைக்கு சம்பளம் கிடைக்காதுன்னு கேள்விப்பட்டேன். இப்போ...நம்ம சண்முகம் இருந்திருந் தால் ரகளை நடக்கும்.' பார்வதி, இடைமறித்தாள். 'அப்படில்லாம் நடக் காது. ஏன்னா...தங்கப்பாண்டி மகள் ஊமப் பிசாச சண்முகததுக்குக் கொடுக்கப்போறதா ஒரு பேச்சு அடிப்படுத.' சரஸ்வதி, இப்போது கொஞ்சம் இன்ட்ரஸ்ட்” காட்டினாள்: 'சண்முகம் ஸார் அவள விரும்புறாரா?' என்று வாய்த்தவறாமல் கேட்டபோது, அனுபவஸ்தரான சீனிவாசன் லேசாகச் சிரித்துக் கொண்டார். மாரியம்மாள் ஆச்சரியத்தோடு கேட்டாள். 'அப்ப டி ன்னா இந்த ஸ்கூல்ல மிட்டேய் மீல்ஸ் திட்டம் இருக்கா?’’ 'மெள்ள பேசும்மா. இந்திராவுக்கு பாம்புக் காது. பேப்பர்ல சோறு பொங்கி, பேப்பர்லயே கஞ்சி காச்சி ஊத்தறாங்க. இந்த அதியாயத்த யாரு கேக்கப் போறாங் 35Gςη π" "ஓ! அதனாலதான் ஏலம் போட்டாங்களா?' ' 'ஆயிரந்தான் இருந்தாலும், ஒரு பள்ளிக்கூடத்த ஏலம் போடுறது என்கிறது சரஸ்வதி தேவியையே போடுறது மாதிரி...' சீனிவாசன் விளக்கினார்: "பணம் பண்ணணுமுன்னு ஒருவனுக்கு ஆசை வந்துட்டா, பெத்த தாயைக்கூட ஏலம் போடு வான். பள்ளிக்கூடம் எம்மாத்திரம்? இப்போ நாட்டோட போக்கே புரியல. மானேஜ்மென்ட் ஏலம்! எம்.பி.பி.எஸ். சீட்டு ஏலம்! மாப்பிள்ளை ஏலம்! இதனால் தான் டாக்டருங்க நோயாளிங்கள ஏலம் போட நாங்க.