பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 3 போல், உன்னருளாலே சதா இயங்குவதே" என்று, குகைக்குத் தென் பக்கம் விழுந்துகொண்டிருந்த அருவி, தன் இரைச்சலால் பேசிக்கொண்டிருந்தது. நிலவொளியில் அந்த அருவி மலையில் உலர்த்திப் போட்டிருக்கும் வெள்ளாடைபோல் தெரிந்தது. அருவி சொல்லாமல் சொல்வதை தான் செய்யாமல் இருந்ததற்கு பிராயச்சித்தம் செய்வதுபோல், குகைக்கு எதிர்த்தாற் போலிருந்த குன்றின் சரிவில் உள்ள குடிசைக் கதவு, சத்தத்தை எழுப்பிக்கொண்டு திறக்கிறது. கதவை இழுத்துத் திறந்ததால், அதில் ஏற்பட்ட அதிர்வுகள சப்த அலைகளாகி அருவியோசையின் அலைகளோடு, இரண்ட றக் கலந்து பிரபஞ்ச அசைவிற்கு தாள லயமாய் லயிக்கின்றன. குடிசைக்கு வெளியே வந்த, காவி வேட்டி கட்டிய சாமியார், கதவைச் சாத்துவதற்கு முன்னதாக, கண்ணுக்கு எதிரே உள்ள சுவரில் தொங்கிய தன் குரு நாதரின் காவி வேட்டியையும், மேலங் கியையும் விழியா டாது பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு, கரங்குவித்து, தலையை லேசாகத் தாழ்த்தி பிறகு உயர்த்திவிட்டு, குகைக் கோவிலைப் பார்த்து மட மடவென்று நடந்தார். அபபடி நடக்கும்போது, இரண்டு கால் பெரு விரல்களுக்கு மேலே, அவற்றிற்கு அடுத்த விரல்களை மடக்கிப் போட்டுக்கொண்டே நடந்தார். குருநாதர் சொல்லிக் கொடுத்தது. பழைய காலத்து சாமியார்களைப்போல், காலில் கட்டைகளைப் போடாமல் விரல் மடித்து நடந்தாலும், இருந்தாலும் இச்சா சக்தி குறிப்பாக பாலுணர்வு போய்விடும் என்று அவர் சொன்ன உபதேசத் தின்படி நடந்து நடந்து பழகியவர்; இப்போது அந்தப் பழக்கமே, தன்னையறியாத ஒரு வழக்கமாக, தன் பாட்டுக்கு செய்துகொண்டிருப்பவர்.