பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சு. சமுத்திரம் உட்காரச் சொன்னார். முக்கியமான புள்ளிகளும், புள்ளி போட வேண்டிய முக்கிய ஆசாமிகளும் உட்காரும் நாற்காலி அது. கிழவர் செறுமிக்கொண்டே பேசினார். 'எனக்கு இன்னும் மனசு கேக்க மாட்டக்குப்பா... நீயும் மானேஜ் மெண்டை தரமுடியாதுன்னு ஒத்தக் காலுலயே நினுை ருக்கணும். நான் பாட்டுக்கு ஒனக்காவ... கரடி மாதிரி கத்துறேன். இந்த மணியமோ, கர்ணமோ ஒப்புக்காவ கூட சப்போர்ட் பண்ணல பாரு... எத்தன தடவ ஒன் கிட்ட கோதும மாவ வாங்கியிருக்காங்க. அவங்க பொண்ணுங்களுக்கும் வேல போட்டு வேற கொடுத் திருக்கே. ஒரு நன்றி இல்ல பாரு... இந்தமாதிரி ஆளுங் களுக்குத்தான் நீ உதவுவ...' "நீரு என்ன கேட்டு, நான் என்ன செய்யல...? நேத்துகூட அத்தகிட்ட மூனுபடி கோதும மாவு...' "நான் அதச் சொல்லலடே... என் தங்கச்சி மவனுக்கு ஒரு வேல போட்டு கொடுடான்னு கரடியா கத்துறேன். ஆறு மாசமா என் தங்கச்சி வீட்டுக்கு நடையா நடக்கா. நீ நினைச்சா முடியாதா? சவத்துப் பயலுக்கு வாத்தியார் வேல கிடச்சிட்டா என் மவள கட்டி வச்சிருவோமில்ல "கொஞ்சம் பொறும். இப்போதைக்கு வேல எதுவும் காலியா இல்ல. மூணு வாத்திச்சிங்க கல்யாணம் ஆக ம இருக்காளுவ. எவளாவது ஒருத்திக்குக் கல்யாணம் ஆவட்டும். காரியத்த முடிச்சிடலாம்.' "எவளுக்குக் கல்யாணம் முடிஞ்சுது? இந்த பறப்பய மொவள வேலையில சேர்த்த...' தங்கப்பாண்டிக்குக் கோபம் வந்தது. கந்தசாமிக் கிழவரை, மானசிகமாக வாசலுக்கு வெளியே கழுத்தைப் பிடித்துத் தள்ளினார். மானசிகமாகத்தான்! என்ன