பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 85 பண்றது? கெஜட்டட் ஆபீஸரா இருக்கிற தம்பி ராஜலிங்கம் இனிமேல் உதவுவது சந்தேகந்தான். பள்ளிக் கூடத்துல எதாவது பிரச்னை வந்தால் இந்தக் கிழவன் தேவை. இவனோட கொழுந்தியா பகன் இன்னொரு மாவட்டத்தில் கல்வி அதிகாரியாய் இருக்கான். கந்தசாமிக் கிழவர், 'என்னடே பேசமாட்டக்கே. அவனும் மெட்ராஸ்ல வேல பாத்துட்டு, வேல பிடிக்க லேன்னு வந்துட்டான். ஒரு வருஷமா ஊரச் சுத்துறான். நீ ஒரு வேல போட்டுக் கொடுத்தால், என் மகளை ஒப்ப டைச்சிடுவேன். ஒனக்கு என்னடான்னா, அந்த பறப்பய மவள், உசத்தியாப் போயிட்டு...' என்றார். தங்கப்பாண்டி , சற்று காரமாகவே பதிலளித்தார். 'விஷயம் தெரியாமப் பேசப்படாது மாமா! என்னோட சரிக்கு சமமா உட்கார்ந்திட்டால் ஒமக்கு விஷயம் தெரிஞ்சதா ஆயிடாது.' " "4" ή... தெரியாதவனுக்குத்தான் சொல்லிக் கொடேன்.' 'அப்படிக் கேளும்... இப்போ சர்க்கார்ல ஒரு ரூல் போட்டிருக்காங்க. அதன்படி ஒரு பள்ளிக்கூடத்துல, ஒரு வேல காலியிருந்தால், முதல்ல ஹரிஜனங்கள்ல ஒருத்தருக்கு அந்த வேலய கொடுக்கணும். வேற யாருக்கும் கொடுக்கக் கூடாது. ரெண்டாவதா வேலை வந்தால் பேக்வேர்ட் -. அதாவது நம்மள மாதுரி பிற்பட்ட ஜாதியச் சேர்ந்த ஒருவருக்குக் கொடுக்கணும். மூணாவதா வேல வந்தால், எந்தச் சாதிய சேர்ந்தவருக்கும் தகுதிப்படி வேல கொடுக் கலாம்.'" 'இழவுல இவ்வளவு சிக்கல் இருக்கா?' 'கரெக்டா சொல்லிட்டீங்க... இது கிட்டத்தட்ட இழவு மாதிரிதான். இருந்தாலும், சர்க்கார் கோலத்துல பாஞ்சால், நாங்க குதிருக்குள்ள பாயிறவங்க.'