பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 87 அவளுக்குக் கல்யாணம் செய்து, புருஷனோட அனுப்பி வச்சிடலாம். அந்த இடத்துக்கு நம்ம பயலைப் போட்டுட gùrr ffo. ** 'ஆண்டவன் புண்ணியத்துல நீதான் அந்தப் பொண்ண கரையேத்தணும். பாவம் ஏழப் பொண்ணு. கல்யாணம் இந்த வைகாசில முடிஞ்சிடுமா?’’ அநேகமா பழந்தான். அப்புறம் ஒம்ம பயல் எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ்ல பதிஞ்சிருக்கானா?" 'அப்படித்தான் சொன்னான்.'" " அப்படின்னா கவல இல்ல. இருந்தாலும் ஒரு சிக்கல். அவன் பேரு விஸ்ட்ல இல்லாட்டா கஷ்டம்.' 'இல்லாட்டா ஒண்ணும் பண்ண முடியாதோ?’’ "பண்ணலாம். எம்ப்ளாய்மெண்ட். லிஸ்ட்படி வந்த வங்க சரியில்லன்னு, லிஸ்ட திருபபி அனுப்பலாம். இப்படி ரெண்டு மூணு தடவ புதுசு புதுசா லிஸ்ட் வாங்கி, நம்ம பயல உள்ள தள்ளிடலாம். ஆனால் கொஞ்சம் செலவாகும்.' 'ஏண்டே மூடி மூடிப் பேசுற ஒன் ரேட்டுத்தான் எவ்வளவு?' 'இந்த சர்க்காரே சுத்த மோசம் மாமா. கிறிஸ்டியன் பள்ளிக்கூடம் மைனாரிட்டிங்க நடத்துற ஸ்கூலாம். அத னால அதுக்கு எம்ப்ளாய்மெண்ட் ஆபீசுக்கு போக வேண் டாமாம் அவங்களே யார வேணும்னாலும் போட்டுக்க லாமாம். ஆனால் நான் போகணுமாம் இதனால என்ன ஆகுது தெரியுமா? அவங்க இஷ்டப்படி யார வேணும் னாலும் போட்டுக்கிடலாம். அதுக்கு பத்தாயிரம் ரூபாய் வாங்குறாங்க. நான் எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ் சரிகட்ட, தாயா அலையுறேன். இவ்வளவுக்கும் ஐயாயிரந்தான் வாங்குறேன்.'