பக்கம்:புதிய பார்வை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி ,405

அந்தக் கடவுளின் அவதார மாண்புகளே எங்களுக்கு விவ சித்துச் சொல்ல வேண்டும். அதைக் கேட்டறிந்து கொள் வதற்கு நாங்கள் ஆவலுள்ளவர்களாக இருக்கிறோம். எங்களுடைய ஆவலே நிறைவேற்ற வேண்டியது உங்கள் கடமை” என்று வேண்டிக் கொண்டனர்.

"உங்களுடைய கேள்வியிலிருந்து பரமாத்வான கண்ணனைப் பற்றி நீங்களேல்லாரும் அறிய விரும்புகிறீர்கள் என்று தெரிகிறது” என்று புன்முறுவல் பூத்த முகத்தோடு அவர்களேப் பார்த்து மறுமொழி பகர்ந்தார் சூத முனிவர்.

"ஆம், சுவாமி பரமாத்மாவான கண்ணன் ஆயர்களுக்கிடையே மண்ணுலகத்துப் பெண்ணான தேவகியின் வயிற்றிலே வந்து பிறந்தாரே இந்தப் பிறப்பின் அந்தரங்கமான நோக்கம் என்ன? அறத்தையும், அறத்தைக் கடைப்பிடிப்ப வர்களையும் கி நிலைநிருத்திக் காப்பாற்றுவதற்காகக் கண்ணபிரான் அவதரித்ததாக நாங்கள் பரம்பரியாகக் கேள்விப் பட்டிருக்கிருேம். அது உண்மையானல் கண்ணனுக்குப் பின் அறத்திற்கு அரகை இருப்பது யாது?’ தங்களுடைய சந்தேகத்தை இப்படித் தெளிவாக விளக்கிக் கேட்டார்கள் சவுனகாதி முனிவர்கள். -

சூதர் உடனே அவர்களுக்கு விவரித்துக் கூறலார்ை: பாகவத புராணம் கிடைத்த வழி முறை வரலாற்றையும் அதன் பெருமைகளையும் கூறியபின் கதைப் பகுதியைத் தொடங்கினர். -

படைப்புக் கடவுளான கான்முகன் காரதருக்குக் கூற. காரதர் வேத வியாசருக்குக் கூற, அவரிடமிருந்து சூத முனி வர் அறிந்து கொண்டார். இப்புராணத்தின் வழி விவரம் இதுவே. சூத முனிவரை இக் காவியத்தின் விவரிப்பாளர் ஆகக் கூறலாம். இவ்வாறு கூறத் தொடங்கிய சூத முனிவர் முதல் பத்துக் கந்தங்களில் பரீட்சித்துவின் கதை அம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/107&oldid=1255325" இலிருந்து மீள்விக்கப்பட்டது