பக்கம்:புதிய பார்வை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 புதிய பார்வை

உலகத்தில் நாகரிகம் பண்பாடுகளால் அளவிடப்பெற வேண்டுமென்று நாம் ஆசைப்படுகிருேம். அ ப் படி அளவிடப் பெருமல் வேறு விதமாக அளவிடப்படுவதைக் காணும் இடங்களில் எல்லாம் மனம் கோகிருேம், ஆடம் பரங்களாலும் பதவிகளாலும், செல்வத்தாலும், மனிதனே அளக்கப் பழகிக்கொண்டு, மனிதத் தன்மைக்காக அளக்கத் தெரியாமல் விட்டு விடுகிற இடங்களைக் கண்முன் காண் கிறபோதெல்லாம் நியாய தேவதை உங்கள் மனத்தில் வந்து கின்று குமுறுகிருள். அர்த்தமுள்ள பழைய சடங்குகளே விடுவதைப்போல் அர்த்தம் இல்லாத புதிய சடங்குகளை ஏற்பதும் தவறுதானே ? -

சுற்றுப்புற உணர்ச்சி

இங்கிதம், விநயம்போன்ற வார்த்தைகளைப் பல முறை கேள்விப்பட்டிருப்பீர்கள். அகராதியிலும் எழுத்துக் கூட் உத்திலும் மட்டுமே இந்த வார்த்தைகளின் பொருள் கிறை வடைந்து விளக்கம் பெற்று விடுவதில்லை. மனிதர்களுடைய வாழ்க்கையிலும், கடத்தையிலும் அதுபவபூர்வமாக எங்த அளவிற்குப் பயன்படுகிறது என்பதைப் .ெ ப று த் துத்தான் இங்தப் பதங்களின் ஆற்றலே காம் புரிந்து கொள்ள முடியும், : . . -

இங்கிதம், விநயம் போன்ற குணங்கள் பள்ளிக்கூடத் திலோ, கல்லூரியிலோ, பாடப் புத்தகங்களிலோ இப்படிப் பட்டவை என்று எல்லைக்குட்படுத்திக் கற்றுத்தர முடியா தவை. பழக்கத்திலுைம், பண்பாட்டிலுைம் கனிந்து கனிந்து உருவாக வேண்டிய இந்தக் குணங்களைப் பற்றி இலக்கணம் சொல்லி விளக்கிவிட முடியாதாயினும் சிந்தித் துப் பார்க்கலாம். - - - -

  • தன்னுடைய சுற்றுப்புறத்தை உணர்ந்து தெளிந்து அதற்கேற்பப் பிறரோடு பழகும் பக்குவம் மிகச் சிறந்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/142&oldid=598232" இலிருந்து மீள்விக்கப்பட்டது