பக்கம்:புதிய பார்வை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፴50 புதிய பார்வை

உண்டு. மேடைச் சொற்பொழிவு என்பது கடைவீதியைப் போன்றது. எல்லாக் கடைக்காரர்களும் தங்களிடமுள்ள பொருள்களே விற்பதற்குத் தயாராகத்தான் இருப்பார்கள். ஆனல் எங்தக் கடையில் எதை வாங்கலாம் என்பது வாங்கு கிறவர்களைப் பொறுத்ததுதான். பிரசங்கம் கேட்கிறவர்கள் எல்லாரும் வாங்குகிறவர்களைப் போன்றவர்கள்.

கூட்டத்திலமர்ந்து கேட்பவர்களின் பக்குவமறிந்து பேசி அவர்களே மகிழ்விக்கிற பேச்சாளன் எங்த இடத்தில் பூத்தாலும் அந்த இடத்தைச் சூழ மணந்து கொண்டி ருக்கிற உயர்ந்த சாதிப் பூவைப் போன்றவன். மேடையில் கின்றபடியே மலர மலாப் பார்த்தவண்ணம் கூட்டத்தைக் கவர்ந்து கொண்டு பேசுகிற பேச்சாளனின் பேச்சு கேட்கிற வர்களின் வாயைக்கட்டி அடக்கிவிடும் உயர்ந்த சங்கீதத் தைப் போன்றது. இப்படிப் பேசும் சக்திவாய்ந்தவர்கள் எவ்வளவு நேரம் பேசினலும் கேட்பவர்களுக்கு கோமே தெரியாது. அப்போதுதான் பேசுவதற்குத் தொடங்கிற்ை போன்று அங்தப் பேச்சில் ஒரு கவர்ச்சி முடிவின்றி நிலைத் திருக்கும். *

ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரொருவிதமான சூழ்கிலே உண்டு. அநுதாபக் கூட்டங்களில் தலைமை வகிப்பவர் முதல் பேச்சாளர்கள் வரையில் எவரும் மறந்தும்கூட ைைகச்சுவையைப் பயன்படுத்தக் கூடாது. கண்டனக் கூட்டங்களுக்கு ஒருவிதமான கடுமைத் தன்மை வேண்டும். அதுதாபக் கூட்டம், பாராட்டுக் கூட்டம் இரண்டிலுமே மொத்தத்தில் புகழுரைகன் தாம் அதிகமாயிருக்கும். ஆனல் ஒரே ஒரு வேறுபாடு உண்டு. அதுதாபக் கூட்டத்துப் புகழுரைகளில் நகைச்சுவை கலவாது. பாராட்டுக் கூட்டத் துப் புகழுரைகளில் நகைச்சுவையும் கலங்து பேசப்படும். கண்டனக் கூட்டத்திலும் குத்தலான நகைச்சுவை இடம் பெற வழியுண்டு. அரசியல் கூட்டங்களுக்கும் புள்ளி விவரங்களுக்கும் தொடர்பு அதிகம். இலககியக் கூட்டங் களுக்கும் மேற்கோள்களுக்கும் நெருக்கம் மிகுதி. கதா காலட்சேபக் கூட்டங்களுக்கு உபகதைகள் உயிர்காடி போன்றவை. சமையலுக்கு அவசியமாகத் தேவையான உப்பு, அளவுக்கு அதிகமாகிவிட்டால் அதுவே சமையலேக் கெடுத்துப் பாழாக்கி விடுவதைப் போலச் சொல்லும் கதையை விஞ்சிக் காடு மண்டிற்ை போன்ற அதிக உப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/152&oldid=598252" இலிருந்து மீள்விக்கப்பட்டது