பக்கம்:புதிய பார்வை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 புதிய பார்வை

திருவள்ளுவரைப் பொறுத்த புகழிலும், பேச்சிலும் கூட விகிதாசார கம்பிக்கை உள்ளவர்களே அதிகமாக ஈடு பட்டிருக்கிருர்கள். விகிதாசார கம்பிக்கைகளும், அரை குறைக் கொள்கைகளுமே மாபெரும் சாதனைகளாகப் போற்றப் படுவதைக் காண்கிருேம். திருக்குறளை வள்ளுவர் எழுதினர் என்பதைவிடத் திருக்குறளாய் வாழ்ந்த பின் அப்படி எழுதினர் என்பதே பெரிய காரியம். அதனல் தான் திருக்குறளின் பெயர்களில் ஒன்று திருவள்ளுவர்" என்றே நூலே எழுதிய கருத்தாவின் பெயராக வாய்த்தது. இப்படி வாழ்ந்தவர் இன்னர் என்று சொல்வதுபோல், கருத்தாவின் பெயரை நூலுக்கு இடும் வழக்கம் இன்று: கமக்கு வியப்பை அளிக்கலாம். ஆல்ை அந்தப் பழம் பண்பில் நூல் எழுதும் தகுதியே விலக்கப்படுகிறது.

"யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை

- எனத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற' என்பதுபோல் தாம் உணர்ந்தவற்றையே கூறுபவராகத் தம்மை எல்லையாக கிறுத்திக்கொண்டு கூறும் குறள்களி லேயே திருக்குறள் அப்படி வாழ்ந்தவர் கூறும் அறிவுரை யாகுமெனத் தெரிகிறது. விகிதாசார கம்பிக்கை-ஒரு நம்பிக்கையாகவே கருதப்படாத அல்லது-கணக்கிடப் படாத காலத்தில் வாழ்ந்தவர் வள்ளுவர். எனவே குறளில் விகிதாசா வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாக எங்கும் கூறப்படவில்லை. முழு கம்பிக்கையோடு குறளைக் கடைப் பிடிக்காமல் விகிதாசார நம்பிக்கையோடு 'குறள் வாழ்க f குறள் நெறி வாழ்க!' என்று மேடைகளிலோ பிற இடங். களிலோ பேசப் புகுவதை இன்று கிறையக் காண்கிருேம். பேசுவதால் குறளின் சிறப்பை நிரூபிக்க முடியாது. வாழ் வதால்தான் ரிச்சயம்ாக நிரூபிக்க முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/58&oldid=598060" இலிருந்து மீள்விக்கப்பட்டது