பக்கம்:புதிய பார்வை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 57

குறளும், சகிப்புத் தன்மையும்

குறள், சகிப்புத்தன்மையைக் கொண்டாடுகிற நூல். ஆனால், குறள் அதிகம் பேசப்படுகின்ற இன்ருே வாழ்க்கை பின் எந்த மூலையிலும் சகிப்புத்தன்மையே காணப்பட வில்லை. எங்த அரசியல்வாதிகள் வள்ளுவரைப் பேசுகிருர் களோ அங்த அரசியல்வாதிகளே தங்களுக்கு மாமுன கொள்கைகள் உடையவர்களைத் தாக்கவும், துன்புறுத்தவும் கடுஞ்சொல் கூறிக் கண்டிக்கவும் தங்களைச் சேர்ந்தவர் களைத் தாண்டிவிடவும் தயங்குவதில்லை. -

"இன்ன செய்தாரை ஒறுத்தல் அவர் காண

நன்னயம் செய்து விடல்'

என்ற குறள் சமூக லட்சியங்களிலெல்லாம் தலைசிறந்த லட்சி யமாக மேடைகளில் பேசப் படுகின்றது. ஆனல் கடைமுறை யிலோ இந்தக் கட்சியார் அந்தக் கட்சியாரைத் தாக்கிக் கொடிக் கம்பத்தை வீழ்த்தினர்கள், ஊர்வலத்தில் கல் லெறி', 'மானேஜரைச் சாப்பிட விடாமல் நாற்பது மணி நேரம் கேராவ் செய்தனர் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. . -

'திருக்குறளைப் பேசுவது குறைந்து அதன்படி வாழ்வது பெருக வேண்டும்-என்று இப்படிச் செய் திகளைப் படிக்கும் ஒவ்வொருமுறையும் மனம் கொங்தபடி கினைக்கிருேம் நாம், "அதெல்லாம் அந்தக் காலத்துக்கு ஏற்ருற்போல வள்ளு வர் ஏதோ எழுதினர். எல்லாவற்றையுமே நாம் அப்படியே கடைப்பிடிக்க முடியாது. நமக்கு முடிந்ததை மட்டுமே நாம் கடைப்பிடிக்கலாமே?' என்று லெளகீகமாக ஒரு சமாதானமும் அங்கங்கே அவ்வப்போது கூறப்படுகிறது. திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கிற ஒவ்வொன்றிலும் இப்படி ஒரு விகிதம் போட்டுக் கழித்துத் தள்ளிவிட்டால் கடைசியில் கடைப்பிடிக்க எதுவுமே மீதம் இருக்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/59&oldid=598062" இலிருந்து மீள்விக்கப்பட்டது