பக்கம்:புதிய பார்வை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 6亨

மிக உயர்ந்த தத்துவங்களேயும், சிக்தனைகளேயும் வாரி சாக விட்டுச் செல்கிறவன் அதன் மூலம் தேசத்திற்குச் செய்கிற சேவையை வேறெவரும் வேறெதன் மூலமும் செய்துவிட முடியாது. ப ைமுய தலைமுறைகளின் தத்துவமும் புதிய தக்லமுறையின் வேகமும் சக்தித்த இடத்தில் இருசாராருமே ஏமாற்றமின்றி ஒப்புக்கொள்ள ஏற்றதாக இன்றைய இந்தியாவிற்குக் கிடைத்திருக்கும் ஒரே தத்துவம் காக்தியம்.

திருவள்ளுவர் எழுதி அளித்தவற்றை நம் கண்முன் ல்ை வாழ்ந்து விளக்கியவர் காந்தியடிகள். பரிமேலழகர் உள்ளிட்ட பதின்மரும் திருக்குறளுக்கு எழுதி உரையளித் தனர் என்ருல், காங்தியடிகள் திருக்குறளுக்கு வாழ்ந்து உரையளித்தார். எழுதியளிக்கும் உரைகளைவிட வாழ்ங் தளிக்கும் உரை சிறந்தது.

இருபது ஆண்டுகளுக்கு முன்லுைம் காந்திய மருந்துக் குத்தான் நோய் தீர்க்கும் ஆற்றல் இருந்தது. இருபதாண்டு களுக்குப் பின்னல் இன்றும் அந்த மருந்துக்குத்தான் கோய் நீர்க்கும் ஆற்றல் இருக்கிறது. .

மற்றைய தலைவர்களேப் போல் அல்லாமல் அரசியல் பிரச்னைகளுக்கும் சமூகப் பிரச்னைகளுக்கும் சேர்ந்தே மருந்து கண்டவர் காங்தியடிகள், சில தலைவர்களின் தத் துவங்களும் சிந்தனைகளும் அரசியல் பிரச்னைகளுக்குத்தான் விடிவு காணமுடியும். வேறு சில தலைவர்களின் சித்தாங் தங்கள் சக்தர்ப்பவசமான பிரச்னைகளுக்கு மட்டுமே பரி காரமாக அமையும். இன்னும் சில தலைவர்களின் முடிவுகள் ஒருகுறிப்பிட்ட துறையில் பரிகாரம்காண்பதோடு வேறு ல. துறைகளில் இல்லாத புதிய பல பிரச்னைகளே உண்டாக்.ஓ. விட்டுவிடும், -

4–5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/71&oldid=598088" இலிருந்து மீள்விக்கப்பட்டது