பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 அரசன் தெய்வாம்சமா? மனிதர்களை ஆள்வதற்குத் தான் தெய்விகமான உரிமை பெற்று இங்கு வந்திருப்பதாக எவளுவது ஒருவன் இன்று சொல்லத் துணிந்தால், அது கிந்தைக் குரிய விஷயமாகும், அவன் எவ்வளவு உயர்ந்த பீடத் தில் அமர்ந்திருப்பவயிைனும், இதுதான் விஷயம். எந்த மனிதனும் இம்மாதிரிக் கற்பனை செய்துகொள்வ தைச் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அரசர் களின் இந்தத் தெய்விக உரிமையைப் பற்றி நாம் எவ் வளவோ கேட்டிருக்கிறேம்; பழைய வரலாறுகளில் இதைப் பற்றி ஏராளமாகப் படித்திருக்கிறேம்; இதைப் பற்றிக் கடைசி முறையாகக் கேட்டு முடிந்தாகி விட் டது, இந்தக் கொள்கையைப் பல சகாப்தங்களுக்கு முன்பே முடித்துக்கட்டிப் பூமிக்குள்ளே ஆழமாய்ப் புதைத்தாகி விட்டது என்று காம் எண்ணிக் கொண் டிருந்தோம். இந்தியாவிலோ அல்லது வேறிடத்திலோ, யாராவது ஒரு நபர் அந்த உரிமையை இன்று கோரி ல்ை, அவர் இந்தியாவின் தற்கால நிலையை உணராதவராவார். அத்தகைய கபர்களுக்கு கான் தெளிவாய்க் கூறிக்கொள்வது இதுதான் : அவர் களுக்கு மரியாதை காட்டவேண்டுமானல், அத்தகைய கருத்தை அவர்கள் குறிப்பாகக்கூடக் காட்டக் கூடாது, பேசுவது அறவே கூடாது. இந்த விஷயத் தில் விட்டுக் கொடுத்துச் சமாதானம் செய்துகொள் வது என்பதே கிச்சயமாய்க் கிடையாது. - அரசியல் நிர்ணயசபைச் சொற்பொழிவு, 22-1-1947. o: H