பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 மாறிக்கொண்டு வரும் ஒரு சமுதாயம் உடைமை பற்றிய அடிப்படையான தன் கருத்துக்களைப் பரி சீலனை செய்து மாற்றிக்கொள்கின்றது. இது வழக்கம் தான். இதைக் கண்டு எவரும் பயப்பட வேண்டிய தில்லை. இதல்ை காம் எதிர்பார்க்கும் குறிக்கோள்களை அடைய முடியுமானல், நாம் அ ைத வரவேற்க வேண்டும். -டிெ டிெ H # o அடிக்கடி ஆராய்ந்து பார்க்கவேண்டும் காம் மேலே செல்லச் செல்ல, இந்தக் கூட் டுறவு விஷயத்தை அடிக்கடி பரிசீலனை செய்து, வேண்டும் மாற்றங்கள் செய்து, கி ஜூல ைம க ள் மாறுவதற்கு ஏற்றபடி, அதையும் பொருத்தமாக மாற்றிக்கொள்வோம். இத்தகைய விஷயம் மாற்று வதற்கு ஏற்றபடி இளக்கமா யிருப்பதே நலம். வெறும் சித்தாந்த ரீதியாகவோ, ஏட்டுப் படிப்பு முறையிலோ, இதைப் பார்ப்பது விரும்பத் தக்கதன்று. இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். முதலாவதாக, பல்வேறு வகையான பிராந்தியங்களுள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில், சித்தாந்தம் பேசிக்கொண் டிருப்பதும், நெகிழ்ச்சி யில்லாத இறுகிய முறையை அமைப்பதும் புத்திசாலித்தனமாகாது; இரண்டாவ தாக, 36- கோடி மக்களைப் பாதிக்கக் கூடிய இத் தகைய பெரிய இயக்கத்தில் நாம் இறுகலான ஒரே கோட்பாட்டைப் பற்றிக்கொண்டிருக்கவும் முடியாது. சமயத்திற்குச் சமயம் எது தேவை என்பதை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். ஆதலால் இத்தகைய பரந்த நோக்கத்துடன் இந்தச் சபை இவ்விஷயத்தைக் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.