பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O3 இந்தியாவிலுள்ள நாம் ஜனப்பெருக்கத்தைக் கட்டுப் படுத்துவதிலே அதிக அக்கறை கொண்டிருக்கிறேம். இது முக்கியமானது என்பதுடன், அவசரமாகவும் கவனிக்க வேண்டிய விஷயம். -ஆஜாத் ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 1959. ow * 書 22 ஏழைகள் வாழ்க்கை குப்பைமேட்டுக் குடிசைகள் குப்பைமேடுகளுள்ள கழிசடையான இடங்களில் பெருங்கூட்டமாக ஜனங்கள் வசிப்பதைக் கண்டால், எனக்குப் பயங்கரமாயிருக்கிறது. நாடோடி போலவோ குழுவரைப் போலவோ ஒருவன் திறந்த வெளியில் வசிப்பதைப் பற்றி கான் கவலைப்படுவதில்லை. கானே ஒரளவு காடோடிதான். காடோடிகளையும் குழுவர்களை யும் கான் விரும்புகிறேன். ஒருவன் மண் குடிசையில் வசித்தாலும், எனக்குக் கவலையில்லை. ஆல்ை நகரங் களில் குப்பை மேட்டுக் குடியிருப்புக்களை கான் வெறுக்கிறேன்; அவைகளில் இருப்பவர்களுக்கு நீங் கள் கட்டடங்கள் அமைத்துக் கொடுக்க முடியாவிட் டால், திறந்த வெளியாயுள்ள ஒர் இடத்தை அவர் களுக்கு அளியுங்கள். நல்ல சுகாதாரம், குடிதண்ணிர் முதலிய சில வசதிகளையாவது அளித்து வாருங்கள், மற்ற வசதிகள் அவர்களுக்குத் தொடர்ந்து கிடைத்து விடும். -பங்களுர் கார்ப்பரேஷன் கட்டடத்திற்கு அடிப்படைக் கல் போடும் பொழுது ஆற்றிய சொற்பொழிவு, 6-10-55.