பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 நீதிமன்றங்களில் நேருவின் வாக்குமூலங்கள் சிறையே வீடு 1921-முதல் 1945-வரையில் 24- ஆண்டுகளில் ஜவாஹர்லால் நேரு ஒன்பது முறை சிறை செல்ல கேர்ந்தது. அவருடைய அருமையான வாழ்க்கையில் மொத்தம் 3,262 நாட்கள் சிறைகளிலேயே கழிந்தன. அவ்வளவு கெடுங்காலம் மாட்சிமை பொருந்திய பிரிட்டிஷ் மன்னர் பிரானின் விருந்தினராயிருந்த நேரு தாம் 1947- முதல் 1964 வரை-தமது இறுதி நாள் வரை-இந்தியாவின் ஒப்பற்ற பிரதம மந்திரியாக வும் பணியாற்றி வந்தார். வட இந்தியாவிலும் வங் காளத்திலும் அவர் பல சிறைகளைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. லட்சுமணபுரி, காபா, ாைகனி (அலகாபாத்), பரெய்லி, டேராடுன், கல்கத்தா, அல்மோரா, கோரக்பூர், அகமதுநகர் கோட்டை ஆகிய இடங்களில் அவர் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் கைதியாக இருந்தார். 1942-ல் அவர் கடைசி முறை யாகச் சிறை புகுந்ததில், 1,040- நாட்கள் தொடர்ச்சி யாகச் சிறைவாசம் அநுபவிக்க நேர்ந்தது. 1942-ல் கடைசி முறையாக நேருவைக் கைது செய்யும்பொழுது, அரசாங்கம், காந்தியடிகள் உட்பட காங்கிரஸ் கிர்வாகக் கமிட்டி உறுப்பினர் அனைவரை யுமே சேர்த்துக் கைது செய்து, சிறையில் வைத்தது,