பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 அப்பொழுது அவர்கள்மீது குற்றங்கள் சாட்ட வில்லை, வழக்குகள் தொடரவில்லை, விசாரணையில்லா மலே அடைத்து வைத்தது, ஆனால் அதற்கு முன்பு நேரு கைதான எட்டுச் சக்தர்ப்பங்களிலும், அவர் நீதி மன்றங்களிலே விசாரிக்கப் பெற்றுத் தண்டனை யடைந்தார். அந்த விசாரணைகளில் சிலவற்றில் அவர் அளித்த வாக்குமூலங்கள் பொன்னெழுத்துக்களில் பொறித்து வைக்கத் தக்கவை. அவை சுதந்தர வேட்கை கொண்ட சிம்மத்தின் கர்ச்சனைகள். அவை களிலே பாரத நாட்டின் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற பற்றையும், இக்காட்டின் தனிப்பெரும் தலைவரான காந்தியடிகளிடம் அவர் கொண்டிருந்த அன்பும், மதிப்பும், அவருடைய வீரமும், கம்பிக்கை யும், காங்கிரஸின் கட்டளையைத் தவிர வேறு எவர் கட்டளையையும் தாம் ஏற்க முடியாது என்று அவர் காட்டிய உறுதியும், சிறை புகுவதிலே அவருக்கு இருந்த ஆர்வமும் ஆத்திரமும் தெளிவாகக் கூறப் பட்டிருக்கின்றன. எந்த விசாரணையிலும் அவர் கலந்து கொள்ளவில்லை, தமக்காக வாதாடவில்லை. ஆங்கில நீதிமன்றங்களை நீதி தங்கியுள்ள தலங்க ளாகவே அவர் மதிக்க மறுத்துவிட்டார். முதல் விசாரணை 1921- ஆம் வருட இறுதியில் அலகாபாத்தில் அங்ாகியத் துணிக் கடை மறியல் தீவிரமாக கடந்து வந்தது. ஐக்கிய மாகாணம் முழுதுமே மறியலுக்காக ஏராளமான தொண்டர்கள் காங்கிரஸ் சபையால் சேர்க்கப்பெற்று வந்தனர். அரசாங்கம் தொண்டர் படையே சட்ட விரோதமான ஸ்தாபனம் என்று பிர கடனம் செய்தது. பண்டித ஜவாஹர்லால் நேரு டிசம் பர் மாதம் 6-ந் தேதி கைது செய்யப்பட்டார். சட்ட விரோதமான ஸ்தாபனத்தில் லட்சுமணபுரியில் அவர்