பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O6 பது வழக்கமா யிருந்தது. வீர அகாலிய சீக்கியர் ஜாதாக்களாக அணிவகுத்துச் சென்று எதிர்த்து வந்த னர். அவர்களைப் போலீஸ்காரர்கள் தடிகளைக்கொண்டு கையப் புடைத்து வந்தார்கள். அடி என்றல் மற்றும் பல இடங்களில் நடந்த தடியடி போன்ற தன்று. பல ருடைய மண்டைகள் உடைக்கப் பெற்றன, அங்கங் கள் சிதைக்கப் பெற்றன. ஒரு ஜாதாவினர் அடி பட்டுச் சாய்ந்தவுடன், அடுத்த ஜாதா வந்துவிடும். இவ் வாறு சீக்கியர், பூரணமான அஹிம்சா விரதத்தை மேற் கொண்டு, பெருந் தியாகம் செய்து, இறுதியில் வெற்றி யும் பெற்றனர். அவர்களில் பலர் முன்பு பிரிட்டிஷா ருக்கு உதவியாகப் போராடிய மாஜி சிப்பாய்களா யிருந்தனர். ஜெய்தோ என்ற இடத்தில் சீக்கிய ஜாதாக்கள் சத்தியாக்கிரகம் செய்வதைப் பார்க்க வேண்டுமென்று அச் சமயத்தைச் சேர்ந்த அன்பர் சிலர் நேருவை அழைத்திருந்தனர். அப்பொழுது டில்லியில் காங்கிரஸ் மகாகாட்டுக்காகச் சென்றிருந்த நேரு, அங்கிருந்து அருகிலிருந்த ஜெய்தோவுக்குச் செல்ல முற்பட்டார். அவருடன் திரு. கித்வானி, திரு. கே. சந்தானம் என்ற நண்பர்களும் சென்றனர். ஜெய்தோ காபா சமஸ் தானத்திலுள்ளது. சீக்கிய ஜாதாக்கள் வரும் சமயம் ஜெய்தோவை அவர்கள் கெருங்கியதும், அவர்கள் சமஸ்தானத்தை விட்டு உடனே வெளியேறிவிட வேண்டுமென்று அரசாங்கம் உத்தர விட்டது. அவர் கள் திரும்பிச் செல்லாததால், மூவரும் கைது செய்யப் பெற்றனர். அப்பொழுது பண்டித ஜவாஹர்லால் நேருவின் வலது கையையும் சந்தானம் அவர்களின் இடது கையையும் சேர்த்து விலங்கிட்டு, மூன்று கைதிகளை யும் ஜெய்தோ நகரின் வழியாகப் போலீஸார் அழைத்