பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 சட்டத்தைப் பிரகடனம் செய்தனர். அது அந்த ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட பன்னிரண்டாவது அவ சரச் சட்டம் ! அந்த அவசரச் சட்டப்படி, கேரு அலகாபாத் நகரை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும், வேலை நிறுத்தம், பொதுக் கூட்டம் முதலியவற்றிற்கு ஏற்பாடு செய்யக்கூடாது என்றும், மற்றும் சில நிபந் தனைகளுடனும், டிசம்பர் 21-வ அவருக்கு ஒர் உத்தர விடப்பட்டது. அவரோ என்றுமே முடி பணிந்தறியா தவர். மேலும், அவர் பம்பாய்க்குச் சென்று அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் கலந்து கொள்ளவும், அங்கு வந்து இறங்குவதாயிருந்த மகாத்மாவை வரவேற்கவும் அவர் செல்லவேண்டி யிருந்தது. எனவே, அவர் உடனே ஜில்லா மாஜிஸ்தி ரேட்டுக்குத் தம் கருத்துக்களை விளக்கி ஒரு கடிதம் எழுதி யனுப்பினர். அதிலே கண்ட சில வீர வசனங்கள் வருமாறு : '... கான் ஒர் உறுப்பினராகச் சேர்ந்துள்ள மாபெரும் ஸ்தாபனத்தின் உத்தரவுகளைத் தவிர, வேறு எந்த உத்தரவையும் கான் ஏற்றுக்கொள்வது வழக்கமில்லை என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய தேசிய காங்கிரஸ் ஒன்று தான் எனக்கு உத்தரவு போட முடியும். நான் வேறு எந்த அதிகார ஸ்தாபனத்தையும் அங்கீகரிப்பதில்லை... 'என் வேலைகளைக் கட்டுப்படுத்தவோ, அகில இம்தியக் காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் என் வேலைக்கு இடையூறக எதற்கும் களிம் து .ெ கா டு க் க .ே வா, அதேபோல நான் அங்கம் வகிக்கும் வேறு கமிட்டிகள், போர்டுகளின் வெ".0களுக்கு இடையூறு தேடிக் கொள்ளவோ மார் ஒப்புக்கொள்ள முடியாது.