பக்கம்:புதிய பொலிவு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

"பைத்யக்காரப் பய! யாரோ பட்டணத்துக்காரனுக் பேச்சைக் கேட்டு இவனும் கெட்டான், மத்தவங்களையும் கெடுத்துப்பூட்டான். இவன் பேச்சை நம்பி, குச்சிக் கிழங்கு பயிர்வைத்தவனெல்லாம் 'கோ'ன்னு கதறிக்கிட்டு கிடக்கிருனுங்க—இவனுக்கு என்ன ஒண்டிக் கட்ட—மற்றவங்க பலபேரு சிறுசும் பெரிசுமா டஜன் கணக்கிலே வைத்துக் கொண்டு கஷ்டப்படறாங்க. இப்ப, இவனா, எல்லாரோட கிழங்கையும் வாங்கிக்கொள்ளப்போறான்" என்று சிலர் பேசினர்; வேலப்பனுக்கு ஆத்திரம் வந்தது. நானே மன வேதனைப்பட்டுக் கிடக்கிறேன், இந்தப் பாவிகள் வேறு என்னை வாட்டி எடுக்கிறார்களே. செச்சே, என்ன ஜென்மங்களய்யா இதுகள் என்று முணுமுணுத்தான்.

செல்லாயி, நிலைமை அறிந்து, சிரித்துப் பேசினால் வேலப்பனுக்குக் கோபமாக இருக்கும் என்பதை எண்ணி, முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டாள் சலிப்பும் சோகமும் கொண்டாள். ஒவ்வோர் நாளும் உச்சிப் போதுக்குள் மடுவில் இறங்கிக் குளித்துவிடுவாள், தலையைக் கோதிக் கட்டிக் கொள்வாள், 'கிழிசல்' தெரியாமல், சேலையைப் பக்குவமாகக் கட்டிக்கொள்வாள், தலைக்கு காட்டுப் பூவாவது பறித்துச் சூட்டிக்கொள்வாள், கலகலவென்று சிரித்துப் பேசுவாள். "கால் பூமியிலே ‘பாவுதா' பார்டா அந்தக் குட்டிக்கு நடக்கறபோதே இவளை என்னமோ இந்தப் பூமி தூக்கித் தூக்கிக் குலுக்கிவிடறதுபோலல்வா நடை போடரு..........நாட்டியக்காரியாட்டமா.........." என்று கேலியாகப் பேசுவார்கள் செல்லாயியை; கிழங்குக்குக் கிராக்கி இல்லை என்பதாலே, வேலப்பன் விசாரப்பட்டான் அதைக் கன்ட செல்லாயி, நாலு குழந்தைக்குத் தாயாகி, நாத்தி மாமி கொடுமையாலே நசுக்குண்டு போனவள் போலானாள்.

"அது ஒண்ணுத்தான் குறைச்சல், ஆமாமாம்'. எல்லாரும் நல்லவங்கதான்...... அவங்க அவங்க பாடு அவங்க-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/14&oldid=1575584" இலிருந்து மீள்விக்கப்பட்டது