பக்கம்:புதிய பொலிவு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

"ஆமாண்டா, விடுடா! நமக்கும் அப்ப, உச்சிக் குளுந்துப் போச்சு. இவ்வளவு பெரிய மனஷனுங்க, நம்மைத் தேடிகிட்டு வரானுகன்னு, நாமும் அவனுங்களுக்காக ஓடி ஆடி வேலை செய்தோம்...'ஓட்டு' போட்டா, ஊர் க்ஷேமமா இருக்கப் பாடுபடுவீங்கிளா, எப்படிச் செய்யப் போறிங்கன்னு ஒரு பேச்சு கேட்டமா? நம்ம ஜாதிக்காரன், நம்ம பக்கத்துக்காரன், என்று எதை எதையோ நம்பினமே தவிர, நாணயமானவனா, யோக்கியமானவனா, நல்லபடி உழைச்சி ஊருக்கு உபகாரம் செய்யப் போறவனா என்கிற எதைப் பற்றியும் யோசிக்கலே. மவாத்துமா தெரியுமேலேன்னு கேட்டான், ஆமா அவரு என்னங்க, கடவுளோட அவதாரம்னு கைகூப்பினோம், மத்த எதையும் யோசிக்கலே..."

"ஏன், யோசிக்கலை! நம்ம காளியாத்தா கோயில் கோபுரத்துக்குக் கலசம் வேணுமுன்னுகேட்டமே..."

"அட, அது ஒரு பிரமாதமா...ஐம்பதோ நூறோ ஆகப் போனது...அவனுக, என்னதான் வேணும், சொல்லுங்க, இதிலே என்ன தப்புங்க, என்னாலானதை நான் செய்யணும்னு எனக்கு ஒரு ஆசை, வேறே ஒண்ணுமில்லே, அப்படி இப்படின்னு சொல்லவே, சரி, எதையோ ஒண்ணு கேட்டு வைப்பமேன்னு, 'கலசம்' வேணும்னு கேட்டம்....... இது ஒரு பெரிய தப்பா?"

"வீண் விவகாரத்தை விட்டுத் தொலைங்கப்பா. தும்பை

விட்டுப்போட்டு, வாலை பிடிக்கறது நம்ம பழக்கமாப் போயிட்டுது. அவனுங்க, சமயத்திலே காலைப் பிடி, தீர்ந்துபோனதும் தலையைப் பிடி என்கிற வித்தையிலே கைதேர்ந்தவங்க. அது கிடக்கட்டும். இப்ப என்ன செய்யறது, சொல்லுங்க. குச்சிக்கிழங்கு விலை போகலேன்னா, நம்ம பக்கத்திலே வேணகுடி பாழாயிடும்... இதை என்ன செய்யறது, சொல்லுங்க"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/17&oldid=1575587" இலிருந்து மீள்விக்கப்பட்டது