பக்கம்:புதிய பொலிவு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

"அழுகிற புள்ளைக்குத்தானே பால் கிடைக்கும்......"

"அட அதான் கேட்கறேன், எங்கே போயி அழுகறது, என்னா சொல்லி அழுகறதுன்னு ....."

மந்திரிகிட்டப் போகலாம் என்கிறாங்க..."

"யாரு? நாமா? மந்திரிகிட்டவா? மடைப்பய மவன்! அவனுங்க மந்திரியாவதற்கு முன்னே போனா பார்த்திருக்க முடியும்—இப்பத்தான் மந்திரி ஆயிட்டாங்களே, இப்ப எப்படிப் பார்க்க முடியும்?"

"அழைச்சி கிட்டுப் போறேன், ஊருக்கு ஒருத்தர் இரண்டுபேரா, சேர்ந்து, ஒரு கமிட்டி போட்டா, போய்ப் பார்க்கலாம்னு......."

"யாரு நம்ம கொடி மரத்தான் சொல்றானா?"

"ஆமாம். அவன் அடிக்கடி போய்ப் பார்க்கறானே மந்திரியை"

"சரி. அதுக்கு என்ன செய்யணுமாம்?"

"அட. இதெப்போயி. கொடிமரத்தானையேதான், கேக்கறதா? நமக்குப் புரியலியா? என்ன நாம் அவனோட கஷ்டத்துக்கு, ஏதாச்சும் நம்மாலே ஆகிற சகாயத்தைச் செய்யவா, மாட்டோம்..."

"இப்ப, எல்லா மந்திரிகளும், கவர்னர் கூட, ஒரு பெரிய திருவிழாவுக்குக்கூடப் போறாங்களாம் அங்கேயே போய்ப் பார்த்துடலாம்னு, கொடிமரத்தான் யோசனை சொல்றான்.....அவனும் நாம ஒரு நாலுபேருமாப்போய் வரசெலவுக்கு, மகாநாட்டுக்கு டிக்கட்டு, சாப்பாடுச்செலவு மாலை மரியாதைச் செலவு, எல்லாம் சேர்ந்து நூறு நூத்தி ஐம்பதுக்கு மேலே பிடிக்காது என்கிறான். இதல்லாம படிக்கு நாமெல்லாம் ஆளுக்கு கீழுக்கு ஒண்ணு மேலுக்கு

ஒண்ணு கதர் துணி வாங்கிக்கிடணுமாம்—மந்திரிகளோட

2


















2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/18&oldid=1575588" இலிருந்து மீள்விக்கப்பட்டது