பக்கம்:புதிய பொலிவு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

(சிரிப்பு) உடனே நிவாரணம் அளிக்கவும் என்று எழுதி இருக்கிறார், ஒரு அன்பர். என்ன நிவாரணம் அளிக்கச் சொல்கிறாரோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்!! குச்சிக்கிழங்குக்கு மார்க்கட் இல்லை என்றால், நான் என்ன செய்ய வேண்டும் என்கிறார்? கூடையிலே வைத்துக் கொண்டு, தெருத்தெருவாகச் சென்று 'குச்சிக்கிழங்கோ' 'குச்சிக்கிழங்கு' என்று விற்கச்சொல்லுகிறாரா? (பலத்த

கைதட்டல்.)......"

"அடச் சே! எழுந்திருங்கடா, போவோம். மகாப் பெரிய மனஷனுங்க....." என்று கோபமாகக் கூறிக்கொண்டே பெரியவர் எழுந்தார்;'கமிட்டி' அவ்வளவும் கொட்டகையை விட்டு வெளியேறிவிட்டது; கொடி மரத்தான் பின்னொடு ஓடிவந்தான்.

"ஏன்? ஏன்? எங்கே கிளம்பிவிட்டிங்க?"

"எங்கேயா? கூடை வாங்கிகிட்டு வந்து, உன்னோட தலைவன் தலையிலே கவிழ்க்க. வெட்கமில்லாமெ எங்களண்டை பேச வேறே வந்துட்டயா......?"

"என்னங்க இது, எதுக்கு இவ்வளவு கோவம்?"

"கோவம் வரலாமா, பாவம்! அங்கே வாரி வாரிக் கொட்டறானே ஒரு புத்திசாலி, கருணையை; அதைப் பார்த்துமா கோவம் வரலாமான்னு கேட்கறே! ஆகவேண்டிய காரியம் ஆயிடிச்சி, இனி நாம அடிச்சவரையிலே இலாபம்னு எண்ணிக்கிட்டு, அந்த மனஷன், ஆகாசத்துக்கும் பூமிக்குமா, குதிச்சுப் குதிச்சுப் பேசறானே—ஜனங்க மூக்காலே அழறாங்கன்னு.....இவனுக நாட்டை நடத்தற நடப்புக்கு, ஜனங்க அழாமெ, இவனுங்க எதிரே வந்து டான்சு ஆடு வாங்க, டான்சு......என்னா எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசறான் அந்த மனஷன். கஷ்டப்படறம், அதைச் சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/21&oldid=1576190" இலிருந்து மீள்விக்கப்பட்டது