பக்கம்:புதிய பொலிவு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

ஐயா! அப்பான்னு! வேண்டிக்கொள்றோம். அதைக்கேக்கப் பொறுக்கலியாமே இவருக்கு. குச்சிக் கிழங்குக்கு மார்க்கட்டு இல்லையானா, நான் என்ன செய்ய, கூடையிலே வைச்சிகிட்டு விற்கவான்னு கேட்கறானே, இதுவாய்யா ஒரு மந்திரி பேசற மரியாதையான பேச்சு. குத்தல் பேச்சு இல்லியா அது. அவனவன் கும்பி காயுதேன்னு கஷ்டப் பட்டுக்கிட்டு, இவனுங்ககிட்டத் தானே அதிகாரம் இருக்குது, போயி நம்மோட குறையைச் சொல்லுவோம்னு வந்தா, கூடையிலே வைச்சிகிட்டு விற்கவான்னு கேலி பேசறாரு...பெரிய குபேரரு! வித்தா என்னவாம்! தலையிலே கூடையைத் தூக்கி வைச்சா, பூமி பொளந்துடுமா, இல்லை, இவரோட மண்டை வெடிச்சுடுமா......பேசறான் பார், மகா பெரிய மேதாவின்னு நினைச்சிகிட்டு போன வருஷம் நான் என் கண்ணாலே பார்த்தனே, நெசவுக்காரனுக கஷ்டப்படறாங்கன்னு சொல்லி, கைத்தறித் துணி மூட்டையைத் தூக்கித் தோளிலே போட்டுக்கிட்டு தெருத்தெருவா போய் வித்தானுகளே, இந்தக் கழகத்துக்காரனுக...கௌரவமா போயிடிச்சி.....மக்களோட கஷ்டத்தை உணர்ந்த மகாராஜனுகன்னு ஏழை எளியவங்க வரவேத்தானுங்க.... இவர் கிண்டல் பேசறாரு. கிண்டல்! கூடையைத் தூக்கினதே இல்லை.....பொறக்கறப்பவே ஓட்டுப் பொட்டியோட பொறந்தவரு....."

"இதோ பாருங்க.....இந்த மந்திரி இப்படித்தான் எப்பவும் வம்பும் தும்பும் பேசறவரு.....இவர் போலவா மத்தவங்க....போகாதிங்க...இருங்க மத்த மந்திரிகள் பேசறதைக்கேளுங்க..."

"ஏன், இந்த ஒரு மந்திரி அபிஷேகம் பண்ணினது போதாது, மத்தவர்களோட அர்ச்சனையையும் கேட்டுட்டுப் போகலாம் என்கிறயா? அடெ அப்பா! கொடி மரம், போதும்டா, எங்களுக்கு வேணுங்கிறது கிடைச்சுப் போச்சு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/22&oldid=1576192" இலிருந்து மீள்விக்கப்பட்டது