பக்கம்:புதிய பொலிவு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

கோபத்தைத் தாங்கிக் கொள்ளவேண்டி வந்தது. செல்லிக்கு அவனைப் பார்க்கும்போது நடுக்கமே ஏற்படும் — சுட்டுத் தள்ளிவிடுவதுபோலப் பார்க்கிறான்!!

"சுத்தமாக் கழுவிடணும், தெரியுதா......துளிசேறு இருக்கப்படாது......" என்று கூறி, மோட்டார் ஓட்டிக் கொண்டுவந்தவன் எட்டணாவைக் கொடுத்தான், பொடிப் பயலிடம்; அவன் அந்த மோடாரை மிகச் சுத்தமாகக் கழுவித்துடைத்துக் கொண்டிருந்தான். அலுப்பினாலே, மரத்தடியில் துண்டு விரித்துப் படுத்துத் தூங்கிவிட்டான், மோட்டார் ஓட்டிக்கொண்டு வந்தவன். அவன் விழித்தெழுந்ததும், சொல்லிவிட்டுப் போகலாம் என்று, பொடிப் பயல் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தான்.

வேலப்பன் அந்தப்பக்கம் வந்தவன், காருக்குப் பக்கத்தில் சிறுவன் இருப்பதைக்கண்டு, "ஏண்டா! ராத்திரிகூடக் சாப்பிடலயே, காலையிலே எங்கே, சுத்த வந்தூட்டே, கஞ்சி கொடுக்கத் தேடினேன், காணமே......ஆமா, இது என்ன, மோடாரு.....இவரு யாரு, துரை, சொகமாத் தூங்கறாரு?" என்று கேட்டான்.

பார்த்தயாண்ணேன், எட்டணா......எருமைமாடு மூணு தேச்சிக் கழுவறமாதிரிதான், இருந்திச்சி—இந்த மோடாரைக் கழுவிவிட எட்டணா கிடைச்சுது! மந்தை எருமையை மேய்ச்சி தேய்ச்சி குளிப்பாட்டி விட்டாக் கூட, கால்காசு கிடைக்காது, இங்கே பாரு, எட்டணா" என்று சிறுவன் பெருமையாகச் சொன்னான்.

"ஆமாம்டா, இனி இப்படித்தான், மோடாரு கழுவி நீ புழைக்கவேண்டியதுதான், நானும், ஏதாவது ரயில் துடைக்கப் போகவேண்டியதுதான். வேறே புழைப்பு? அப்படியாப் பட்ட குச்சிக்கிழங்கு போட்டே கட்டிவராமே கஷ்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/24&oldid=1576196" இலிருந்து மீள்விக்கப்பட்டது