பக்கம்:புதிய பொலிவு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

வந்துடுச்சின்னா, இனி இங்கே எதை நம்பிகிட்டுக் கிடக்கறது" என்றான் வேலப்பன்.

மரத்தடியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தவன் விழித்துக் கொண்டான்.

“டிரைவரு! உனக்கு என்னா சம்பளம் கொடுக்கறாங்க?" என்று கேட்டான் வேலப்பன்.

"மோடார் கார் ஓட்டுபவனுக்கு நாற்பது ஐம்பது ரூபா சம்பளம் கிடைக்கும்" என்றான், அவன்.

"பாரேண்டா, இவரு பேசற தினுசை. உனக்கு உங்க எஜமான் எம்மாஞ் சம்பளம் கொடுக்கறார் சொல்லல்யான்னா......."

"அதுவா? எனக்கு எஜமான் இல்லையே; நான் டிரைவர் இல்லா......என்னோட 'கார்' தான் இது.....” என்றான் அவன்.

"என்னது......? விளையாடறிங்களா......"

"இல்லேப்பா! விளையாட்டு என்ன இதிலே? கார் என்னுடையது தான்......"

"அப்படியா.....நானு....நீங்க மரத்தடியிலே படுத்துத் தூங்கிகிட்டு இருக்கவே, டிரைவருன்னு....."

"மரத்தடி! மாந்தோப்பு! மணம்! ஏர்! உழவர் பாடல்! ஏத்தப் பாட்டு! நாத்து நடும் பெண்கள்! எங்கும் பசுமை! எங்கும் புதுமணம்!......என்று உற்சாகத்துடன் கூறிக் கொண்டே அந்த ஆசாமி, சுற்றிலும் இருந்த காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். வேலப்பனுக்குச் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. வாழ்க்கை குன்றுகிறது. இனிக் கிராமத்திலே இருந்துகொண்டு காலந் தள்ளுவது முடியாது. கிராமத்தைப் பார்த்துப் பார்த்து வெறிச்சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/25&oldid=1576197" இலிருந்து மீள்விக்கப்பட்டது