பக்கம்:புதிய பொலிவு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பேசினயே, அந்தப் பக்குவம் அந்த நகைச்சுவை, அறிவு இருப்பதில்லையே..."

"நீங்க யாருங்க..."

"பைத்யக்காரன் இல்லைப்பா. இப்படிப் பேசினதாலே, உனக்கு இப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கும். நான் பைத்யம் பிடித்தவனல்ல, கிராமத்திடம் எனக்கு அவ்வளவு பாசம், மதிப்பு, மோகம் என்று கூடச் சொல்லலாம். பத்து நாளைக்கு ஒருதடவையாவது, ஏதாவது ஒரு கிராமம் சென்று, அங்கே உள்ள காட்சிகளைப் பார்த்தால்தான் என் மனதிலே ஆயாசம், அலுப்பு எல்லாம் போகும், ஒரு புதுத் தெம்பு ஏற்படும்"

"அப்படி ஒரு பழக்கமா உங்களுக்கு....எங்களுக்கு ஒரு ஆறுமாசத்துக்கு ஒரு தடவையாவது, 'டவுன்' பக்கம் போயி, பளபளா விளக்கு, பலவர்ண ஜொலிப்பு சினிமா, பஜாரு, இதை எல்லாம் பார்த்தாத்தான், ஒரு மாதிரி தெம்பூ.....ஆனா, அதுக்குக் கொஞ்சம் காசு செலவாகும்......அதுதான் இங்கே கிடைக்கிறதில்லை......ஆசையிலே மண் விழுந்துடுது அப்போதைக்கப்போ..."

மோடார் புறப்பட்டுவிட்டது—வேலப்பனுடைய மனம் அந்த 'மோடாருடன்' சென்றுவிட்டது; உடல் மட்டும்தான். கிராமத்தில் உல்விக்கொண்டிருந்தது.

அதுவும் கொஞ்சநாள்தான். வேலப்பன், 'டவுன்'வாசியாகிவிட்டான் — நிலத்தை யாருக்கோ கொடுத்துவிட்டு, கடனைக் கட்டிவிட்டு, கையில் கொஞ்சம்

பணம் எடுத்துக் கொண்டு சென்றான். இதை வைத்து ஏதாவது தொழில் மாதிரி திட்டங்கள் மனதில். நிலம் கைமாற முடிந்தது, செய்யவேண்டும், நடத்தவேண்டும் என்று செல்லத்தின் மனம்? படாதபாடுபட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/27&oldid=1576201" இலிருந்து மீள்விக்கப்பட்டது