பக்கம்:புதிய பொலிவு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

"அதுமட்டும் இப்ப இருக்குதா? பள்ளிக்கூடம், படிக்குது...."

"ஆமாம் மறந்துட்டேன்.......இந்த ஆனை மார்க் அல்வாப் பொட்டலம் வாங்கி, எல்லாம் நாத்தமடிச்சி போயி, சாக்கடையிலே வாரிகொட்டிவிட்டயே, அதிலே வந்த நஷ்டத்துக்குப் போய்விட்டதில்லை, மறந்துட்டேன். உனக்கு எங்கேய்யா, நம்ம பேச்சு ஏறுது? எந்தெந்தப் பயலோ புழைக்கிறான், நான் சொல்ற ஏற்பாட்டைக் கச்சிதமாச் செய்து, நமக்கு வேண்டிய மனஷராச்சேன்னு நான், உன்கிட்டே ஒவ்வொரு பிளானையும் சொல்லிகிட்டுத்தான் வர்ரேன், கேட்டாத்தானே."

"ஏம்பா! நீ சொல்கிறபோது 'ஜோரா'த்தான் இருக்கு, திட்டம், பிற்பாடு யோசிக்கறப்போ, பயம் ஏற்படுதே, புது வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தை அடிச்சிக்கிட்டுப் போவது என்பார்களே, அதுபோல, புதுசா ஏதாச்சும் செய்ய ஆரம்பிச்சி உள்ளதும் போயிட்டா என்னா செய்யறது என்கிற திகில்தான்..."

"உனக்கு கொடுத்து வைக்கலேன்னு சொல்லு. கோழி அடைகாக்கற மாதிரியா, உனக்கு இந்தப் பெஞ்சிலே உட்கார்ந்து, உட்கார்ந்து பழக்கமாயிட்டுது...வேறே யோசனை உநிக்கறதில்லே......"

வேலப்பன், தன்வேட்டியும் சட்டையும் அழுக்காகி விட்டதால் வெளுக்க, 'சோப்' வாங்குவதற்காக வந்தான்; அவன் இலவசமாகத் தங்கியிருந்த இருளப்பன் மில்லில் தொழிலாளி, ஆறு குடித்தனத்துக்கு நடுவில் இருந்து வங்தான்—குளிக்க, துணி துவைக்க பொதுக் குழாய்தான் வேலப்பனுக்கு

"சோப்புக் கட்டி ஒண்ணு"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/29&oldid=1576206" இலிருந்து மீள்விக்கப்பட்டது