பக்கம்:புதிய பொலிவு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

"யாராடா, தம்பி! புதுசா இருக்கே? நீ, ஒரு சோப்புக் கட்டி கேட்கிறபோதே எனக்குப் புரிஞ்சுப் போச்சு நீ டவுனுக்குப் புதுசு என்பது. எந்த ஊரு" என்று மூசா அல்ல, முத்தையன் கேட்டான் — கேட்டு விட்டு, மூணுகட்டி கொண்ட பாக்கட்டு நாலணா விலை—ஒரு கட்டியா வாங்கினா ஒண்ணரை அணாஆகுது, பாக்கட்டா வாங்கினா இலாபமாச்சே—அது கூடத் தெரியாதவனா இருப்பதைப் பார்த்துத்தான் நீ டவுனுக்கு புதுசுன்னு தெரிஞ்சி கிட்டேன்" என்று முத்தையன் விளக்கம் கொடுத்தான்—மூசா ஒரு பாக்கட் கொடுத்தார்—பணம் கொடுத்தான் வேலப்பன். புத்தியை முத்தையனிடம் பறி கொடுத்தான்.

மாதம் மூன்று ஆவதற்குள் ஆறுவகையான 'தொழில்' செய்தாகிவிட்டது—அத்தர் வியாபாரத்தில் தொடங்கி வத்தல் வியாபாரம் வரையிலே நடந்தது—பணம் மிச்சம். பத்துப் பதினைந்து என்ற அளவு வந்த பிறகுதான், மறுபடி மூசாராவுத்தருக்கு யோசனை கூறிக்கொண்டு நாலுநட்சத்திர பீடி பிடிக்க மீண்டும் சென்றான் முத்தையன்.

அதிர்ஷ்டம்னு ஒண்ணு இருந்தா இப்படி ஏன் அலைந்து திரியவேண்டி இருக்குது.....இதோ பார் வேலப்பா! நானும் டவுனுக்கு வந்த புதுசிலே, மில்லுக்கு போக மனம் வரவில்லை பல் பொடி வியாபாரம் பால் வியாபாரம் எல்லாம் ஒரு மூச்சுப் பார்த்து விட்டு பிறகுதான், வயித்துக்கு கிடைச்சாப் போதும்னு, மில்லுக்குப் போனேன். நீ இன்னமும், 'கனா' கண்டு கிட்டே இருக்கறே. எப்படி மாறிப் போயிருக்கறே தெரியுமா? துரும்பா இளைச்சிப் போயிருக்கறே. எங்கே சாப்பிடறயோ, எப்போ சாப்படறயோ இப்படி இளைச்சிப் போயிட்டே......"

"அதெல்லாம் ஒண்ணுமில்லே நமக்கு, எதைச் செய்தா பணம் கிடைக்கும்னு கண்டறியற புத்தி இல்லே.....பணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/30&oldid=1576209" இலிருந்து மீள்விக்கப்பட்டது