பக்கம்:புதிய பொலிவு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

சிவராத்திரி உற்சவம் சிறப்பாச் செய்திங்க. ஊர்ஜனங்ளெல்லாம், 'ஐயாவோட' தருமகுணத்தைப் பாராட்டினாங்க, அது நமக்குச் சந்தோஷம் கொடுக்குது. ஆனா, பணத்தை வாங்க முடியாமெ ஏமாந்துவிட்டுப் போட்டாங்கன்னு ஒரு சின்ன சொல்லு கேட்கப்படாதுங்க—அது நமக்குப் பிடிக்கல்லே. சரி அவளை நாயேன்னவேணாம், பேயேன்னவாணாம் மிரட்டிக் கேட்கவேணாம், வேறு வகையிலே அந்தப்பணம் வந்துசேர வழிசெய்யலாமேல்லோ."

"வேறே வழி என்ன கண்டுபிடிச்சிருக்கே..."

"சரின்னு சொல்லுங்க எஜமான், அவளை உழைச்சி பணம் சம்பாரிக்கவைச்சிக் கடனைத் திருப்பிக் கட்டுடின்னு கேட்கறேன்..."

"அப்படீன்னா...?"

"அவளை 'டிராமா' ஆடச் சொல்றது, அதிலே பணம் வருதில்லே, நம்ம கடனை எடுத்துக்கொள்றது"

"அவ 'டிராமா' நடந்தாத்தானே!"

"நாம நடத்தறது"

வேலப்பன், 'டிராமா? கண்ட்ராக்டரானான்—கடனை வசூலிக்கத்தான். முதல் நாடகத்திலே ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடுகட்ட மூன்று நாடகம் தேவைப்பட்டது. நாலாவது நாடகத்தின்போது. தமயந்தி "ஏதோ உங்களோட தயவு..." என்று கொஞ்சிப் பேசி, தாராசசாங்க நாடகத்திலே அவன்கண்ட அருவருப்பை ஆனந்தமாக்கிவிட்டாள்! செல்லி விடைபெற்றுக் கொண்டாள்; தமயந்தி முத்தையனுக்கு 'அண்ணி' ஆகிவிட்டாள், வியாபாரஸ்தலமே தமயந்தியின் வீடு என்றாகிவிட்டது. வேலப்பன், ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்தவன் என்ற அறிகுறியே மறைந்து விட்டது. எப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/35&oldid=1576220" இலிருந்து மீள்விக்கப்பட்டது