பக்கம்:புதிய பொலிவு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அது, டிராமாவுக்குக்கூடப் போகப்படாது—தலை இறக்கமா இருக்குதுன்னு, ஒரே பிடிவாதம் பிடிக்குது. அதைமட்டும் சரிப்படுத்தி விட்டாப் போதும், ஒரு நாலு நாளைக்குச் சாதகம், மூணுநாள் ஒத்திகை இருந்தாப் போதும்..."

"கொளுத்திப்பிடலாம் போ"

சரிப்படுத்த முடியவில்லை! ஸ்பெஷல் நடக்கவில்லை. வாத்தியார் விரோதியானான்; போலீஸ் 'துப்பு' கிடைக்கப்பெற்று சுறுசுறுப்பாயிற்று. வேலப்பனுக்கு ஒரு வருஷம்; தமயந்திக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்!! வாத்தியார் பழி தீர்த்துக் கொண்டார்.

"தீந்துது வாணவேடிக்கை" என்று கேலி பேசினர் ஜதைகள். திக்காலொருவராக ஓடினர் எடுபிடிகள். அவனவனிடம் அகப்பட்டதை அவனவன் சுருட்டிக் கொண்டான். கிராமத்திலே செய்தி பரவி, செல்லாளைச் செந்தேளாய்க் கொட்டிற்று—மற்றவர்களும் வருந்தினார்கள்.

சிறையிலே வேலப்பன், வெளியே சென்ற பிறகு, மீண்டும் எப்படி வாழ்க்கையைத் துவக்குவது, என்பதுபற்றியே எண்ண மனம் இடம் தரவில்லை என்றால், அவன், செல்லியைத் திருமணம் செய்து கொள்வதுபற்றி எண்ணத்தான் முடியுமா!

செல்லியின் உலகத்திலிருந்து வேறு உலகம் வந்தாகிவிட்டது—சேற்றிலே விழுந்து விட்டாலும் பரவாயில்லை, மணியை எடுத்துக் கழுவிச் சுத்தமாக்கி விடலாம், மலக்குழியில் வீழ்ந்துவிட்டால்!! வேலப்பன் மலக்குழியில் வீழ்ந்து விட்டவனாக மட்டும் தன்னை எண்ணிக் கொள்ளவில்லை, தானே மலமாகி விட்டதாக கூறிக்கொண்டான். எல்லா நல்லவைகளையும் பெற்றிருந்தேன், இப்போது, எல்லாக் குப்பை கூளமும் சேறு சகதியும் நிரம்பிய நாற்றப்பாண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/39&oldid=1576229" இலிருந்து மீள்விக்கப்பட்டது