பக்கம்:புதிய பொலிவு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அட, இந்த ஆட்டுக்குட்டி, கிராமத்திலே நல்ல மேய்ச்சல் கிடைப்பதால் எவ்வளவு கொழுகொழு என்று இருக்கிறதுபார் என்று பாராட்டிவிட்டு, இதோ இந்தக் குட்டிக்கு மட்டுமென்ன, வெய்யில் என்றும் மழை என்றும் பாராமல், கால் கடுக்குமே கைவலிக்குமே என்று கவலைப்படாமல், ஓடி ஆடிப்பாடுபலபடுவதாலே, உடற்கட்டு வளமாக இருக்கிறது—இளமையும் எழிலும் சேர்ந்தவுடன், சிற்பி செதுக்கிய செம்புச்சிலை போலத் தெரிகிறது, என்று மற்றவர்கள் புகழும்போது, ஓவியனுக்கு, ஓவியத்தின் பிடியிலும் அகப்படாதிருந்த கவர்ச்சி கண்முன் தோன்றிற்று. எல்லோரும் ஓவியத்தைப் பார்த்து இவன் திறமையைப் பாராட்டிக் கொண்டிருந்தனர், அவனோ அவளையே எண்ணிக்கொண்டிருந்தான்.

கிராமங்கள் பலவற்றுக்குச் சென்று அவன் தன் கருத்திலே மகிழ்வூட்டிய எத்தனையோ காட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறான்—பச்சைக்கிளிகள் பறந்து செல்லும் காட்சி பால் சுவைக்கும் கன்றினை அன்புடன் தாய்ப்பசு நாவினால் தடவிக் கொடுத்திடும் காட்சி, உழவுத் தொழிலிலே உள்ள பல்வேறு வகையான காட்சிகள், கிராமியப் பெண்களின் குறும்புப் பார்வை, உழவனின் உடற்கட்டு, வெள்ளை உள்ளம் கொண்டவன், புதுமைப் பொருளை விறைத்து விறைத்துப் பார்ப்பது, ஆகிய பல காட்சிகள் அவனிடம் சிக்கி, ஓவியமாயின ஆனால் இந்தக் கட்டழகி—திரையில் மட்டும் தீட்டி வைக்கப்பட வேண்டியவளல்ல, உள்ளத்திலே தங்கி விடவேண்டியவள் என்று வடிவேலன் தீர்மானித்தான்.

வடிவேலன் வசதியான குடும்பத்தினன்—வயதான தாயாருடன், தன் பூர்வீகச் சொத்தைப் பாழாக்கிக் கொள்ளாமல் ஆடம்பரமின்றி வாழ்ந்து வந்தான். ஓவியத்திலே அவனுக்கு நிரம்ப ஆர்வம்; அதற்காக அவன் கிராமீயக் காட்சிகளில் மனம் செலுத்தத் தொடங்கி, கிராமத்தினிடமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/43&oldid=1576378" இலிருந்து மீள்விக்கப்பட்டது