பக்கம்:புதிய பொலிவு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

தின் முட்கள் பிறருக்காக, ஒழுங்காக வேலை செய்து கொண்டிருப்பது போல, வாழ்க்கை அமைந்திருந்தது. கடிகாரம் மணி அடிப்பது போல, இங்கு சில நேரம் பேச்சு— சிரிப்பு—மற்ற நேரத்தில், ஒழுங்கான, நிதானமான, அளவிடப்பட்ட ஓட்டம்!!! செல்லியின் வாழ்க்கை இதுபோல இருந்ததில்லையே. அவளுக்கு ஆச்சரியமாகவே இருந்தது எண்ணிப் பார்க்கும்போது. அவள் காதிலே அவள் குதூகலமான குரலொலிபட்டு, நாட்கள் பலவாகிவிட்டன. கிராமத்திலே, ஒருநாளைக்கு நூறு தடவை, அவள் கூவுவாள், பெரியப்பா! அண்ணேன்! பாட்டி! அப்போய்! அட, உன்னைத் தான்! கூனுக்கிழவா! கொண்டைக்காரி! சண்டைக்காரி!—இப்படி ஒவ்வொருவருக்கு ஒரு பெயரிட்டு, உரத்த குரலில் கூப்பிடுவாள், ஓடிச் சென்று சிலரைத் தடுத்து நிறுத்துவாள், சிலர் கரத்தைப் பிடித்திழுத்து விளையாடுவாள்—எல்லாம் பழங்கதையாகிவிட்டது. உரத்த குரலில் பேச வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. எப்போதும் கண் பார்வையில் பட்டபடி இருக்கிறாள் வேலைக்காரி ! மாமி, எதிரிலேயே 'பாரதம்' படிக்கிறாள். அவரோ, வந்ததும் ஓவியம் எழுதுகிறார்—அது முடிந்ததும், எப்படி கண்ணழகு? உன்னோடு போட்டி போடுதா உனக்கும் இவளுக்கும் போட்டி, யார் ஜெயிப்பீர்கள்? என்று, கொஞ்சுவார்! வேறே பேசவேண்டிய நிலைமையே வருவதில்லை. வாயடைத்துக் கொண்டல்லவா இருந்திருக்கிறோம் இவ்வளவு நாட்களாக, என்று எண்ணி, தனக்குத்தானே ஆச்சரியப்பட்டாள்.

பெரிய இடத்துக்கு வாழ்க்கைப்பட வந்தவள் என்பதாலே, செல்லியிடம், உபசாரம் பேச, நாகரீகப் பெண்கள் வருவதுண்டு.

வாங்க.. என்று மரியாதையாகத்தான் அழைப்பாள், ஆனால் மறுகணமே, அவர்களுக்கும் நமக்கும் ஒட்டிவராது

4
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/50&oldid=1576413" இலிருந்து மீள்விக்கப்பட்டது