பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§5

மரபைத் தகர்த்தெறிந்து விட்டு இவர்கள் ஒரு பழைய கவிதை மரபை ஆதாரமாக வைத்து, இன்றைய பேச்சு வளத்து அடிப்படையிலே புதுக்கவிதை செய்ய முயன்றிருக் கிருர்கள். அவரவர்கள் மொழியிலே அவர்களுடைய புதுக் கவிதை முயற்சிகள் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஐரோப்பிய மொழிகள் இ சிலவற்றிலே இப்போது புதுக் கவிதை திடமான ஒரு இலக்கியக் குழந்தையாக காட்சி தரு கிறது. -

தமிழில் புதுக்கவிதையின் அவசியத்தைப் பற்றிய வரையில் எனக்குச் சந்தேகமில்லை. மரபுக் கவிதை செத்து விட்டது. (அல்லது செத்துக் கொண்டிருக்கிறது. இன்று கவிகள் என்று மரபுக் கவிதை எழுத வருகிறவர்கள் சொல் லடுக்குப் பாடை கட்டிக் கொண்டிருக்கிருர்கள்.) புதுக் கவிதை தோன்றியே தீரும். ஆளுல் அது எந்த உருவம் எடுக்கும் என்று இப்போது யாரும் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஏனென்ருல் பலரும் பலவிதமான முயற்சிகள் செய்து பார்த்து வெற்றி தோல்விகள் ஓரளவுக் காவது நிர்ணயமான பின்தான் புதுக்கவிதை உருவாகி இலக்கியப் பூரணத்வம் பெற்று விமரிசன விஷயமாக முடியும்.

(சரஸ்வதி ஆண்டுமலர்) க.நா.சு. சரஸ்வதியில் அதிகமாக கவிதைகள் எழுதவு மில்லை. கவிதை பற்றிய அவருடைய கருத்துக்கள் குறிப் பிடத் தகுந்த பாதிப்பு எதையும் உண்டாக்கி விடவும் இல்லை. .

சரஸ்வதி இதழ்களில் வேறு யாரும் புதுக்கவிதை எழுத முன்வரவுமில்லை. -

பொதுவாக, சரஸ்வதி கவிதைத்துறையில் எவ்விதமான சாதனையும் புரிந்துவிட வில்லை. சோதனை முயற்சி என்ற தன்மையில் புதுக்கவிதையை அது விரும்பி வரவேற்று ஆதரவு கோடுக்கவும் இல்லை.