பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95.

இதற்குக் காரணம் சரஸ்வதி' ஆசிரியர் விஜய பாஸ்கரனுக்கு கவிதையில் அவ்வளவாக ஈடுபாடு கிடை யாது. நல்ல கவிதைகளே ரசிக்கக் கூடியவர்தான் அவர். என்ருலும் புதுக்கவிதை என்பது பரிகாசத்துக்கு உரியது. என்றே நண்பர் கருதியதாகத் தோன்றியது. *தட்டுங்கள்திறக்கப்படும் என்ற கேள்வி பதில் பகுதியில் அவர் எழுதி யுள்ள இரண்டு கூற்றுகளை நான் இதற்கு நல்ல உதாரண மாகக் காட்ட முடியும்.

கே: வசனத்தில் கவிதை வருமா?

பு: ஓ! வசனத்தில் கவிதைவரும்; கவிதையில் வசனம் வரும். இரண்டிலும் வசன கவிதை வரும். ரெண்டுங் கெட்டான் தமிழர்களுக்கு எதுதான் வராது?

(சரஸ்வதி, 1959-8வது இதழ்) கே: வசன கவிதை என்ருல்? ப: வெஜிடபிள் பிரியாணி என்று அர்த்தம்.

(சரஸ்வதி, 1958-11)

ஆகவே, சரஸ்வதி மூலம் புதுக்கவிதை புத்துயிர்ப் போ, புதிய வேகமோ பெற முடியாமல் போனதில் ஆச்சர்யம் எதுவுமில்லை.

12. எழுத்து-முதல் வருடம்

புதுக் கவிதை புதிய மறுமலர்ச்சியும் இயக்க வேகமும் வலிமையும் பெறுவதற்கு எழுத்து தோன்ற வேண்டி யிருந்தது. . . . - - .

சி. சு. செல்லப்பா 1959 ஜனவரியில் எழுத்து’ மாசிகையை ஆரம்பித்தார். அப்போது அவர் புதுக் கவிதை சம்பந்தமாகத் தீவிரமான கொள்கைகளோ, ஆசை நிறைந்த எதிர்பார்ப்போ, ஆர்வம் மிகுந்த திட்டமோ கொண்டிருந்தார் என்று சொல்வதற்கில்லை.

அப்படி ஏதேனும் இருந்திருந்தால், அது அவசியம் முதல் இதழின் ஆசிரியப் பிரகடனத்தில் ஒலிபரப்