பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதுக்கவிதையின்
தோற்றமும் வளர்ச்சியும்

1. தோற்றம்

புதுக்கவிதை என்ற பெயர் அநேகருக்குப் பிடிக்கவில்லை. இந்தப் பெயரைக் கண்டு பலர் மிரளுகிறார்கள். கேலி செய்ய வேண்டும் என்ற தூண்டுதலே இது சிலருக்கு ஏற்படுத்துகிறது. இதன் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பார்த்துக் குழப்பம் அடைகிறவர்கள் பலர்.

காலவேகத்தில் கவிதைத்துறையில் இயய்பாக ஏற்பட்ட ஒரு பரிணாமம் இது. தமிழ்க் கவிதையில் மலர்ச்சி பெற்ற இப்புதுமைக்கு ‘புதுக்கவிதை’ எனும் பெயர் 1960 களில் தான் சேர்ந்தது. நியூ பொயட்ரி என்றும், மாடர்ன் பொயட்ரி என்றும் ஆங்கிலத்தில் கூறப்படுவதை ஒட்டி, தமிழில் புதுக்கவிதை என்ற பெயர் இம்முயற்சிக்கு இடப்பட்டது.

ஆயினும் ஆரம்பத்தில் யாப்பு முறைகளுக்குக் கட்டுப்டாமல், கவிதை உணர்வுகளுக்கு சுதந்திரமான எழுத்து உருவம் கொடுக்கும் இப்படைப்பு முயற்சி 'வசன கவிதை' என்றே அழைக்கப்பட்டது. பின்னர், யாப்பில்லாக் கவிதை ‘இலகு கவிதை’ ‘கட்டிலடங்காகக் கவிதை’ (ஃப்ரி வெர்ஸ்') போன்ற பெயர்களை இது அவ்வப்போது தாங்க நேரிட்டது.

புதுக்கவிதை என்பதில் மிரட்சிக்கோ பரிகாசத்துக்கோ, குழப்பத்துக்கோ எதுவும் இல்லை.

முன்பு பழக்கத்தில் இருந்து வருகிற-மரபு ரீதியாக் அமைந்த-ஒன்றிலிருந்து மாறுபட்டு (அல்லது அதை மீறித்) தோன்றுவது புதுசு. (புதிது). மரபு ரீதியான, யாப்பு இலக்கணத்தோடு ஒட்டிய கவிதைகளிலிருந்து மாறுபடும் இக்கவி-புது-1