பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிஞ்சுத் துடைகளில் ரத்தம் கசியும். இடது கை நகத்தை வெட்டியெறி அல்லது குழந்தை சுமப்பதை விட்டுவிடு. நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும் நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும். 'குறும்பை தோண்டலாமே-காதில் குறும்பை தோண்டலாமே?” குறும்பை தோண்டலாம் குறும்பை தோண்டலாம் குறும்பைக்குக் குடியிருப்பு டலுக்குக் குடிமாற்றம் குருதியிலும் கலந்துபோம்-உன் குறுதியிலும் கலந்துபோம். நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும். நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும். இவ்வாறு புதிய நோக்கும் போக்கும் பெற்ற பசுவய்யா தொடர்ந்து கவிதை எழுதினர். கதவைத் திற, வாழ்க்கை, மேஸ்திரிகள் என் எழுத்து என்பன எழுத்து’ முதல் ஏடுகளில் வெளி வந்துள்ளன.

கருத்தாழம் கொண்ட மேஸ்திரிகள்’ என்ற கவிதை மிகுதியும் ரசிக்கத் தகுந்தது.

1. - பல்கலைக் கழகத்தின் முன்னுெரு தோட்டம் தீட்டிஞர் மேஸ்திரி அற்புதத் திட்டம்,

2 திட்டம் விளைந்தது தோட்டம் மறைந்தது காட்சி தந்தது மிருகக் காட்சிசாலை.