பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. பிச்சமூர்த்தி கட்டுர்ை

புதுக் கவிதையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் வரலாற்று ரீதியில் எழுதுவதற்காகவே இத்தொடர் பிறந்தது அதனுல்தான் புதுக்கவிதையின் ஆரம்பகாலமான 1940களில் அம்முயற்சி சம்பந்தமாக இலக்கிய பத்திரிகைகளில் பிரசு féリ二.む- JGC好5cm「エ அபுப்பிராயங்களையும் முழுக்கட்டு ரைகனாக அவ்வப்போது எடுத்தெழுத நேரிட்டது. -

1950களில் புதுக்கவிதை புதியவேகம் பெற்று வளரத் தொடங்கியது. அப்போதும் அந்த முயற்சியைக் கேலி செய்தும், குறை கூறியும்: கண்டித்தும் பேசியவர்களும் எழுதியவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அவர்களது எதிர்ப்புக்குப் பதில் கூறுவது போல, ந. பிச்சமூர்த்தி எழுதிய கட்டுரை எழுத்து. (பிப்ரவரி 196i 14வது ஏட்டில் வெளிவந்தது. . .

கருத்தாழம் கொண்ட, வசன கவிதை என்ற அந்தக் கட்டுரையை அப்படியே எடுத்தழுதுவது இவ்வரலாற்றுக்கு அவசியமானது என்று நான் கருதுகிறேன். சிந்தனைச் தெளிவோடும் அழுத்தத்துடனும் எழுதப்பட்டுள்ள அக் கட்டுரை இன்றைய ரசிகர்களுக்கும் இனி வரும் வாசகர் களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வசன கவிதை

வசன கவிதை என்று கிடையாது. அது கவிதையே ஆகாது என்று ஒரு விமர்சகர் கூறியிருக்கிரும். ஏன் இல்லை, ஏன் ஆகமுடியாது என்று தர்க்க ரீதியாக எனக்கு விளங்க ఇమేజు. வசனமும் கவிதையும் வெவ்வேறு வகையைச் சேர்ந்தவை என்பது உண்மைதான். வசனம் நமக்கு செய் தியைத் தெரிவிக்கிறது. நம்முடைய அறிவுக்கு உணவாகப் புதிய விஷயங்களைக் கொண்டுவந்து சேர்க்கிறது. எனவே தபாலப்போல இயங்குகிறது. கவிதை நம்முடைய அறிவு டன் தொடர்புகொள்ள முயல்வதில்லை. நம்முடைய உணர் வுடன் உறவாட முயல்கிறது. நேரிடையாக உள்ளத்தைத்