பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

தொட்டு புதிய அனுபவத்தை எழுப்ப முயல்கிறது. தனக் குள் எரியும் சுடர்கொண்டு மற்ருெரு மனத்தையும் சுடர் கொள்ளச் செய்கிறது, வசனம் லோகாயத உண்மையை அடிப்படையாகக் கொண்டது. கவிதை மன நெகிழ்ச்சியை, மன அசைவை அடிப்படையாகக் கொண்டது,

ஆளுல் வசனத்தை கவிதையைப் போல் செயல்படுத்த முடியாதா? கூடாதென்ற நியதி உண்டா? இல்லை. அம் மாதிரி செயல்படும் பொழுது வசனம் தன் தொழிலே விட்டுக் கவிதையின் தொழிலை ஏற்றுக்கொண்டு விடுகிறது என்று தான் ஏற்படும். பார்வைக்கு வசனம். உண்மையில் கவிதை. மற்ருெரு விஷயம். இப்பாகுபாடு தெளிவை உத்தே சித்து செய்யப்பட்டதே ஒழிய நிரந்தரமானதென்று கருதக் கூடாது. நோக்கத்தினுல் அவை பாகுபாட்டைச் சேர்ந்த தன்மையோ மற்ருெரு பாகுபாட்டைச் சேர்ந்த பெருமையை யோ அடைகின்றன. ஜூரத்தில் வேகம் ஏறுவதுபோல் உணர்ச்சி கூடினுல் தரையில் நடக்கும் வசனம் சிறகு பெற்றுக் கவிதையாகிவிடும், -

ஒரு உதாரணத்தைக்கொண்டு பார்ப்போம். பாரதியார் காட்சி என்ற தலைப்பில் சில வசன கவிதைகளே இயற்றித் தந்திருக்கிரு.ர்.

இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை, உடைத்து. காற்றும் இனிது. தீ இனிது. நிலம் இனிது. ஞாயிறும் நன்று. திங்களும் நன்று. வானத்துச் சுடர்கி ளெல்லாம் மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது இடி இனிது.” - -

என்று முதல் கவிதை தொடங்குகிறது, இது வசனமா? தர்க்க அறிவுக்கு என்ன புரிகிறது. கண்ணக் கட்டி காட்டில் விட்டதுபோலல்லவா இருக்கிறது. சுருதி பேதமாக அல்லவா இருக்கிறது.? ஆம் வசன ரீதி யாகப் பார்த்ததால் விளேந்த வினை இது. இது கவிதை செய்தி சொல்ல வந்த, விஞ்ஞானத்தை விளக்க வந்த வசன மல்ல. சிருஷ்டியின் அனுபவத்தைக்கூறும் உணர்வுள்ள சொற்கள். - * * . -