பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#95

எனவே வசனம் கவிதையாக முடியாதென்று முன் கூட்டியே முடிவு செய்வது தர்க்கத்திற்கு ஒவ்வாது. மனித னுடைய மொழிகள் அடைந்துள்ள மாறுபாட்டையும், கவிதை என்னும் துறை அடைந்துள்ள வளர்ச்சியையும் சரித்திர ரீதியாக உணராத குற்றம்தான் இம்மாதிரி அபிப் பிராயங்களுக்குக் காரணமாகிறது.

கவிதையின் சரித்திரத்தைப் பார்த்தால், பாட்டி லிருந்தே கவிதை பிறந்திருக்கிறதென்று தோன்றுகிறது. முதல் முதலாக மனிதன் பாடத்தான் பாடியிருப்பான். இத் துறையில் அவனுடைய ஆதிகுருமார்கள் என்று குயிலையும் மாட்டையும் கரிச்சானையும், நீரொலியையும் இடியையும் இவை போன்ற எண்ணற்றவையேயும்தான் கொள்ள வேண் டும். எனவே பாடினன் என்பதைவிட இசைத்தான் என்றே கூறலாம். ஒருக்கால் வாயால் இசைக்கும் முன்னரே இசைக் கருவிகளைக் கண்டுபிடித்திருக்கவும் கூடும். வண்டடித்த மூங்கிலில் எழும் ஒலியைக் கொண்டே புல்லாங்குழல் கண்டு பிடித்தார்கள் என்றுசொல்லக் கேட்டிருக்கிறேன். இசைக் கருவிகளைக் கொண்டு இசையறிவு விரிந்திருக்கக் கூடும். நாதசுரத்தில் சாகித்யத்தைப் பழக தத்தகாரங்களே போது மானவை என்று சொல்லப் டுவதையும் இங்கு நினைவூட்டிக் கொள்ளலாம். வாத்தைகளை உருவி விட்ட மெட்டைத் தானே வாத்யத்தில் கேட்கிருேம். முதல் முதலாக சொல் லுக்கு அதிக இடமற்ற இசையே பாட்டாக உலவிற்று என்று கருதலாம்.

மனிதனுடைய சிந்தனையும் உணர்ச்சியும் வளர்ச்சி அடையத் தலைப்பட்ட பிறகு வெறும் இசையால் உண்டா கும் இன்பத்துடன் பொருளேயும் மன நெகிழ்ச்சியையும் வியப்பையும் துயரத்தையும் சொற்களின் மூலம் ஊட்டி இசைக்கு நிரந்தரமான அடிப்படையையே அளிக்கலாமே என்ற ரகசியம் மனிதனுக்குப் புலணுகி விட்டது.

சவுக்கைத் தோப்பின் வழியே காற்று பாய்ந்து சென்ற பிறகு தோன்றும் ஒயுமொலி சொல்லொணுத ஏக்கத்தை உண்டாக்குகிறது என்பது தம்முடைய அனுபவம், ஆணுல்