பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iii

துறையில் மட்டும் புதுமை ஏன் சாத்யமாகக் கூடாது? யாப் புக்கிணங்கிக் கவி புனைபவர்களில் சொத்தை சொள்ளே தோன்றுவது போல வசன கவிதைத் துறையிலும் இருக்க லாமே ஒழிய, புது முறைக்கே தோல்வி ஏற்பட்டு விட்டதாக தர்க்க ரீதியாகக் கொள்ள முடியாது. கருத்துக்களின் இசைவே. உணர்வின் சலனமே, கவிதா சிருஷ்டியின் ஒருமையே புது கவிதையாகும்.

ரவி, மதி, தாரகைக்கு வணக்கம்' என்று எட்வர்ட் கார்ப்பெண்டர் என்னும் அமெரிக்கக் கவி ஜனநாயகத்தை நோக்கி’ என்னும் நீண்ட கவிதையைத் தொடங்குகின்ருச். இவ்வரியை ஒரு நிமிஷம் கவனிக்கலாம். இது நம்முடைய அறிவுக்கு எந்த செய்தியையும் சொல்லவில்லை. எந்தப் பொருளையும் குறிப்பிடவில்லை. ஆணுல் நமக்குப் புதிய உண்மை ஒன்றை-மறந்து போனதை நினைவூட்டுவதென் ருலும் சரிதான் -இது கூறுகிறது. புதிய கதவம் ஒன்றைத் திறந்து உலக சிருஷ்டியுடன் நமக்கிருக்கும் உறவு முறை க3ளக் காட்டுகிறது சிருஷ்டியின் பெரு வெளியில் நம்மைப் போல் செல்லும் சகப் பிராணிகள் இருப்பதையும், நாமும் அவர்களும் சேர்ந்து ஒரே நோக்குடன் தோழமையுடன் இயங்குவதையும் சுட்டிக்காட்டி, குசலம் விசாரித்து, வணக் கம் செலுத்துகிறது. சிருஷ்டி என்னும் மகத்தான இயக்கத் தில் இசைவு பெற்றுள்ளவன் தான் கவி, அவன் கூற்றுத்தான் கவிதை என்ற உண்மையை நாம் உணர்கிருேம், கவிதைக் குப் பிறப்பிடமான ஒருமையும் இசைவையும் உணர்கிருேம். எனவே, இவ்வரியைப் படித்ததும் ஊன் பொதிந்த குறுகிய குடிசையில் தொல்லப்படும் நம் சிற்றுணர்வு விடுதலை பெற்று விரிந்து பறக்க உதவிய இவ்வனுபவத்தைக் கவிதை என்று உணர்கிருேம். -

இதே அகண்ட இசைவைத் தான், கவிதைத் தன்மை பைத்தான், பாரதியாரின் காட்சி"யினும் காண்கிருேம். வசன கவிதைக்கு இதுவே மற்ருெரு சிறந்த உதாரணமாகும். பாரதியாருக்குப்பின் இத்தடத்தில் சென்றவர்கள்