பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 14

திற்கும் ஒலிநயம் உறவு உண்டு என்ருலும் கவிதையில் உள்ள ஒலிநயத் தோற்றமே வேறு. இந்த ஒலிநயத்தை கொணர்வதில்தான் கவிஞன் சாமர்த்தியம் இருக்கிறது. சந்தத்தைக் கொண்டு வார்த்தைகள் ஓசையை தாளப்படுத் திக் காட்டி கவிதையை உணரச் செய்வதுதான் என்பதல்ல. இந்த மென்மையான ஒலி-நயத்துக்கு அதிக முத்கியத் துவம் கொடுப்பதுதான் புதுக்கவிதை முயற்சி. சந்த அமைப்பு ஒழுங்கற்று கையாளப் பட்டிருக்கலாம். அதைப் பற்றிய அக்கறை இல்லாமலும் இருக்கலாம். ஆனல் ஒலிநயம் அதில் இருக்கத்தான் செய்யும். இதனுல் மரபான கவிதையில் ஒலிநயம் இல்லை என்று சொல்லி விடமுடியாது. சந்தமும் எதுகை மோனையும் சொற்கட்டும் ஒலிநயத்தை ஏற்றக்கூடியவை தான். அதை உணரச் செய்ய வைப்பவை தான், ஆளுல் சீர் அசை தளைகளின் மூலம் கட்டுப்படுத்தப் பட்டு வெளித் தெரியும்படியான தாளக்கட்டுடன் அமைந்த கவிதைகளில் விட புதுக் கவிதையில் ஒலிநயத்துக்கு இடம் அதிகம். -

"மரபுக்கிணங்கிய கவிதையில் ஒலிநயம் என்று தனியாக இருப்பதாகக் கூறுவதே ஒரு பிரமை என்று வாதிக்க இடம் இருக்கிறது என்று பிச்சமூர்த்தி கூறுகிருர். ஒலிநயம் என்ற குணநியதியை முற்ருக புறக்கணிப்பது வசன கவிதை' என்கிருர் முருகையன். ‘வசன கவிதை என்பது கவிஞன் தன் உணர்வை தோன்றிய போக்கில் சிதறவிடுவதாகும்’ என்கிருர் கைலாசபதி, ஆளுல் இந்த மூன்றுக்கும் பதில் சொல்வது போல அமைந்திருக்கிறது. புதுக் கவிதை முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபட்டிருந்த கு.ப. ராஜ கோபாலன் எழுதியுள்ள சில வரிகள்.

"வசன கவிதைக்கும் யாப்பிலக்கணம் உண்டு. அதிலும் மாவிளங்காய் தேமாங்கனி எல்லாம் வந்தாக வேண்டும். வரும் வகை மட்டும் வேருக இருக்கும். வசன கவிதைக்கும் எதுகை மோனே கட்டாயம் உண்டு. ஏனென்ருல் இந்த அலங்காரங்களே எல்லாம் உள்ளடக்