பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

கற்பனை வளமும் நிறைந்த கவிதைகளை எழுத முற்பட்டார். அவருடைய முதல் கவிதை நான்’-த. சி. ராமலிங்கம் ான்ற பெயரில்-எழுத்து 13-வது ஏட்டில் பிரசுரமாயிற்று.

ஆரின்ருள் என்ன? பாரீன்று பாரிடத்தே ஊரீன்று உயிர்க்குலத்தின் வேரீன்று வெறும் வெளியில் ஒன்று மற்ற பாழ்நிறைத்து உருளுகின்ற கோளமெல்லாம் அன்று பெற்று விட்டவளென் தாய்!

இப்படிப் பிறந்து வளர்வது அக் கவிதை

தரும சிவராமுவின் இரண்டாவது கவிதை பயிர்' 23வது இதழில் வந்தது. அவருடைய கவித்துவத்துக்கு நல்லதோர் எடுத்துக் காட்டு அது.

வேலிகட்டா வானத்தில்

வெள்ளிப் பயிர் வளர்க்க

தாலிகட்டிச் சக்தியின

ஈர்ப்பென்ற நீர்பாய்ச்சிக்

காலமெல்லாம் காத்திருக்க

வைத்துவிட்டாய் வைத்துமென்ன?

ஊழியென்ற பட்சி அவள்

அய்ர்ந்திருக்கும் வேஆனயிலே

வேலிகட்டா வானத்தில்

வெள்ளி விதைகளெல்லாம்

அள்ளி விழுங்குவரை

நீர்பாய்ச்சி என்ன பயன்

வேர்மு:ளக்கக் கானேமே!

முதல் வருடத்தில் கவிதை எழுதத் தொடங்கிய

கி. கஸ்தூரிரங்கன் கற்பனைப் பெண் என்ற இனிய கவிதை ஒன்றே ஒன்றை மட்டும் எழுதியதுடன் நிறுத்திக் கொண்டார். அது ரசிக்கப்பட வேண்டிய படைப்பு.

மஞ்சம் ஒழிந்திருக்கப்

பஞ்சணைகள் பூத்திருக்க