பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#32

இந்த நாட்களில் தான். பாரதியின் "வசனகவிதை ஏற்றுக் கொள்ளப்பட்டு ந. பிச்சமூர்த்தியின் புதுக்கவிதைகளும் இன்று அங்கீகரிக்கப்பட்டுவிட்டன.

ந. பி. ஆரம்பித்து வைத்த புதுக்கவிதை முயற்சி இயக்கம் எழுத்துவில் தொடர்ந்தது. மயன், சிட்டி, வல்லிக் கண்ணன் ஒன்று சேர, பின்னர், தி. சோ. வேணுகோபாலன், டி. கே. துரைஸ்வாமி, தரும சிவராமூ, சி. மணி, எஸ். வைதீஸ்வரன், குறிப்பாக இன்னும் சிலரும் கலந்து கொண்டு புதுக்கவிதையை வளப்படுத்தி வருகிருர்கள். சுமார் இருபத்தைந்து கவிகளின் குரல்களே எழுத்து வாசகர்கள் இந்த நான்கு ஆண்டுகளில் எழுத்து மூலம் கேட்டு வந்திருக்கிருர்கள். ஆனல் இந்தக் குரல்கள் ஒரே தொனியாக இல்லாமல் பல்வேறு விதமாக தன்தன் ஒளியைக் காட்டும் முகமாக அமைந்திருப்பதை பார்க் கிருேம். அவர்கள் வைக்கும் முத்திரைகளும் வேறு வேறு. இந்தச் சமயத்தில் 1912-17ல் இமேஜிஸம் என்ற படிமக் கொள்கையை வைத்துக் கொண்டு இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் டி. இ. ஹாம், எஸ்ரா பவுண்டு, ரிச்சர்ட் ஆல்டிங்டன், எமி லோவல் போன்ருேர் கவிதை புனருத் தாரணத்தில் முழு மூச்சாக ஈடுபட்டதை கவனத்துக்குக் கொண்டு வர வேண்டி இருக்கிறது. தங்களுக்கு முன் சென்ற பெரியவர்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. எஃப். எஸ். ஃபிளிண்ட் என்பவர் எழுதினுர் -

‘Rhyme and metre are artificial and external additions to poetry and that as the various changes that can be rung upon them were worked out, they grew more and more insipid until they have become contemptible and encumbering.”

இது இன்றைய தமிழ்க் கவிதை சம்பந்தமாக எவ்வளவு வார்த்தைக்கு வார்த்தை பொருந்துகிறது! பல நூற்ருண்டு களுக்கு முன்பு படைப்பான விரல்விட்டு எண்ணக்கூடிய சில சிறந்த நூல்களுக்குப் பிறகு இந்த நூற்ருண்டு ஆரம்ப