பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#33

கால பாரதிக்கு வரும் வரையில், சொல் ஆடம்பரமும் நச்சுப் படுத்தப்பட்ட உள்ளடக்கமும் மலிந்த படைப்புகள் எத்தனை? பாரதிக்குப் பிறகு இன்று வரைகூட அதே ரீதியில், கற்பனையும் கருத்தும் இல்லாமல், பத்திரிகை செய்யுள்களாக தீபாவளிக்கும் பொங்கலுக்கும், பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் ஐந்தறைப் பெட்டியிலிருந்து ஃபார்முலா ரீதியாகத் தயாராகும் ஓசைச் சொல் செய்யுள்களும் மெட்டுப் பாட்டு களும் எத்தனை? இதை வைத்து தமிழில் 2000 கவிகள் இருப்ப தாக ஒரு பெருமை வேறு:

புதுக்கவிகள் இயக்கம் இதையெல்லாம் உடைத்து மீட்சி பெற இயங்குகிற இயக்கம். இதில் தன் பங்கை இந்த் நான்கு ஆண்டுகளாக செலுத்தி வருவதுதான் எழுத்துவின் சாதன. வாசக அன்பர் குறிப்பிட்டிருப்பதுபோல் எதிர் பார்த்திராததுதான், ஆளுல் அது நடந்து விட்டது-எதிர் பார்த்திருந்தாலும், அதுக்கு மேலாக எழுத்து பிரசுரம்’ வெளியீடுகளாக வெளி வந்திருக்கும் காட்டுவாத்தும் (ந. பிச்சமூர்த்தி) புதுக்கவிதைகள் தொகுப்பும் இதுக்கு சான்று.” .

1962-ல் எழுத்து ஏடுகளில் வந்த கவிதைகள் பலவும் கருத்து ஆழம், கற்பனை வளம், வாழ்க்கைத் தத்துவம், மற்றும் நயங்கள் அநேகம் கொண்ட வளமான படைப்புக் களாக விளங்கின. டி. கே. துரைஸ்வாமி, சி. மணி, எஸ். வைதீஸ்வரன், தர்மு சிவராமூ, வல்லிக்கண்ணன் அதிகமான கவிதைகள் எழுதியுள்ளனர். தி. சோ. வேணு கோபாலன், கி. கஸ்தூரிரங்கன், மயன் ஒவ்வொரு கவிதை படைத்துள்ளனர். புதிதாகக் கவிதை எழுத முற்பட்டிருந்த பலரது கவிதைகளும் இவ்வருடம் எழுத்து இதழ்களில் இடம் பெற்றன. சி. சு. செல்லப்பாவும், சு. சங்கரசுப்ரமணியனும் கவிதை முயற்சிகளில் உற்சாகத்தோடு ஈடுபட்டனர். ஆங்கிலத்திலிருந்து பல கவிஞர்களின் படைப்புகள் தமிழாக்கப்பட்டுப் பிரசுரமாயின. ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் மூன்று வந்துள்ளன.