பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$34

இவ் வருடத்தில், புதுக் கவிதையில் நெடுங்கவிதை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிச்சமூர்த்தியின் காட்டு வாத்தும், சி. மணியின் நரகம் கவிதையும் சிறப்பான படைப்புகள். 3 நரகம் விசேஷமானது. இதை வெளியிட்டபோது, 43-வது ஏட்டில் புதுக்கவிதையில் ஒரு மைல் கல் என்று தலையங்கம் எழுதி எழுத்து பெருமைப்பட்டது. ; "எழுத்துவில் இதுவரை வெளிவந்திருக்கும் தூற்றுக்கும் அதிகமான கவிதைகள் புதுக் கவிதையின் சத்தான தாக்கான குணங்களை நிரூபித்திருக்கின்றன. சி. மணியின் நரகம் புதுக்கவிதை முயற்சியில் ஒரு மைல் கல்ல நாட்டு கிறது. நீளத்தில் மட்டுமல்ல; உள்ளடக்கம், உருவ அழகு, படிமச் சிறப்பு, வாழ்க்கைப் பார்வை, மதிப்பு, தத்துவ நோக்கு, உத்தி கையாளுதல் இத்யாதிகளில் சிறப்பு விளங்கு கிறது. பிரிட்டிஷ் கவி டி. எல். எலியட்டின் ஜே ஆல்ஃப்ரட் ப்ரூஃபராக்கின் காதல் கீதம்', 'பாழ்நிலம்: பாணியில் தமிழில் வெளிவரும் முதல் நீண்ட கவிதை அல்லது குறுங்காவியம் என்று இதைப் பற்றி நினைக்கத் தோன்றுகிறது. இந்தக் கவிதையை வெளியிட வாய்ப்பு பெற்றதில் எழுத்துக்கு பெருமை.”

'நரகம்’ புதுக்கவிதையில் ஒரு சோதனை முயற்சி; வெற்றிகரமாக அமைந்த நல்ல சாதனே. நாகரிக நகரத்தில் திரியும் ஒருவனது உணர்வுக் கிளர்ச்சியை, காம உணர்வு தூண்டி விடும் உள்ளக் குழப்பத்தை, அதை வேதனையாக வளர்த்து விடுகிற புறநிலைகளை, அவனுடைய எக்கங்களே விவரிக்கிறது. இந் நெடுங் கவிதை. வர்ணனைகளும், புதுப் புது உவமைகளும் நயமாகச் சித்திரிக்கப்படுகின்றன. இதில். உலக இலக்கியத்தில் புதுக்கவிதை பிரமாக்கள் தங்கள் படைப்புக்களில் பழங் கவிதைகளிலிருந்து சில சில வரிகளே, பொருள் பொதிந்த வாக்கியங்களே அப்படி அப்படியே எடுத்தாண்டு தங்களுடைய கற்பனையை வளரவிடுவதை ஒரு உத்தியாக அனுஷ்டித்திருக்கிருர்கள். சி. மணியும் இவ்