பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மலர்ந்தது மேல் நாட்டில் கவிதை உலகம் கண்ட அனுபவம். அது பூத்த பூக்கள் நிறைய”.

இதற்குப் பின், தமிழில் பாரதி செய்த முயற்சிகள் பற்றி குறிப்பிட்டுவிட்டு, புதுக் குரல் கவிஞர்கள் சிலரது சில படைப்புக்களே செல்லப்பா இம்முன்னுரையில் ஆராய் திருக்கிருர்- -

"1910-20களில் மேல் நாட்டு புதுக்கவிதைக்கு ஒரு உந்துதல் ஃபிராய்டியம், மார்க்ளியேம் இரண்டிலிருந்தும் மகுேதத்துவ லோகாயத தத்துவ ரீதியாகவும் ஏற்பட்டது” என்ற தகவலும் இம்முன்னுரையில் காணக் கிடக்கிறது.

மார்க்லிய தத்துவத்தினுல் பாதிக்கப்பட்டவர்களும்மார்க்ஸியம் நோக்குடன் வாழ்க்கையையும் சமூகத்தையும் கவனித்து தங்கள் எண்ணங்களை சொல்கிறவர்களும் அவர்களது கருத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களும் தமிழில் புதுக்கவிதை எழுத முற்பட்டார்கள். அது பிந்திய நிகழ்ச்சி. *எழுத்து ஏடுகளில் கவிதை எழுதியவர்களும், புதுக் குரல்கள்’ கவிஞர்களும் ஃபிராய்டிஸ் தத்துவத்தால் பாதிக் கப்பட்டவர்கள் என்று சில விமர்சகர்கள் குறிப்பிட முன் வந்தார்கள். இது தவருன கணிப்பு ஆகும்.

வாழ்க்கையை கவனித்து, வாழ்வும் காலமும் அன்ருட நிகழ்ச்சிகளும் உள்ளத்திலும் உணர்விலும் உண்டாக்கிய அதிர்வுகளே எழுத்தாக்க முயல்கிறவர்கள் அனைவரும் ஃபிராய்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று லேபிள் ஒட்டுவது தவருண செயல் தான். அதேபோல் சமூகத்தில் காணப்படுகிற வறுமை, பணத்திமிர், இதர கொடுமைகள் சீர்கேடுகள் முதலியன ஏற்படுத்துகிற உள்ளத் துடிப்புகளே. எழுத்தாக்குகிற எல்லோரையும் மார்க்சீய தத்துவப் பாதிப்பு பெற்றவர்கள்-மார்க்சியப் பார்வையோடு பிரச்னைகளே அணுகுகிறவர்கள் என்று முத்திரை குத்தி விடுவதும் தவருண கணிப்பாகவே முடியும். -

ஃபிராய்டிசம், மார்க்சிஸம் போன்ற தத்துவங்களைப் பற்றி எதுவுமே அறியாதவர்கள்கூட வாழ்க்கையாலும்