பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

திற்கு முன்பே திருக்குறளில் சங்க காலக் கவிதையில் கேட்காத ஒழுக்க ரீதியின் புதுக்குரல் ஒலித்ததை நாம் இன்றும் கேட்க முடிகிறது. -

'ஆதிக் காவிய காலத்தை அடுத்து, மேன் மேலும் சமூகக் கட்டுப்பாடுகள் ஆதிக்கக்கரங்களை நீட்டிய காலத்தில் திருக்குறளைப் போல் சில நீதி நூல்கள் ஒழுக்க நீதிப் புதுக் குரலில் மேலும் உரக்கப் பேசினதை நாம் கேட்கலாம். இக் காலத்தை அடுத்து, பக்தி இயக்கக் காலத்தில் பக்திக் கவிதை கடவுளைப் பற்றிய புதுக்குரல் இசைத்தது. அதற்கு முன் கடவுளேப் பற்றிப் பாடல்கள் பாடப்பட்டாலும் இக் காலத்தில் போல உள்ளுணர்வுடன் உண்மை வேகத்துடன் ஆந்தை பாவத்துடன் பாடப்படவில்லை என்பதால் இக் காலத்தின் பக்தி வகையின் குரல் வகை புதியது என்று உணரலாம். இதற்குப் பிந்திய காவிய காலத்தில் கடவுளுக்குப் பதில் கடவுள் தன்மை பற்றிப் புத்தம் புதுக் குரல் எழுந்ததை இன்றும் நாம் கேட்கிருேம். கம்பன் காவியமே இதற்குச் சான்று. கம்பராமன் மலர்களால் அர்ச்சிக்கப்படும் கடவுளாகப் தோன்றுவதைக் காட்டிலும் கவிதைச் சித்திர மலர்களால் உருவாக்கப்படும் கடவுள் தன்மை குடிவாழும் மனிதனுகக் காண்பதால் இதைத் தெளி யலாம். இது அல்லாமல் காவிய காலக் கவிதையின் குரல் வகையில் முன்னேவிடவும் சமுதாய பொதுமைக் குரலும் இழைந்துள்ளது என்றும் சொல்ல வேண்டும்.

  • பின்னர் சாத்திர வளர்ச்சிக் காலத்தில் கவிதையின் குரல் வகை மாறியது, மேல் உலக இயலும் பற்றிய புதுக் குரலே அது என்று குறிக்கலாம். இவ்வாறே பார்த்துக் கொண்டே வந்தால் சித்தர்கள் காலக் கவிதையில் ஞானிக் குரலும், பாரதி கவிதையில் புத்தம் புதியதாகத் தேசமும் விடுதலையும் பற்றிய குரலும் ஒன்றைவிட்டு மாறி இன்னென்ருக ஒலித்ததை நாம் கேட்கலாம். பாரதியின் தேசீயப் புதுக் குரலில் ஆன்மசக்திக் குரலின் இழைவும் உண்டு. பாரதிக்குப்பின் வாழ்வின் ஒரு புதுக் காலத்தில்